Male Menopause Twitter
ஹெல்த்

Male Menopause: ஆண்களுக்கும் வரக்கூடிய தொந்தரவுகள், அறிகுறிகள்

ஆண்களில், டெஸ்டோஸ்டிரோன் போலப் பிற ஹார்மோன்களின் உற்பத்தியும் வயதாகும்போது குறைகிறது. இது ‘ஹைபோகோனாடிசம்’ (hypogonadism) என்று அழைக்கப்படுகிறது.

மினு ப்ரீத்தி

பெண்களில் இனப்பெருக்கக் காலம் முடிவடைந்து, மாதவிடாய் நிற்கும் காலத்தில் சில ஹார்மோன் இயக்கங்களும் மாறுபடும். மாதவிடாய் காலமும் மெனோபாஸ் காலமும் சில நேரங்களில் அவர்களின் வாழ்க்கையில் பேரழிவை ஏற்படுத்துகிறது. உடல்நிலையிலிருந்து மன பிரச்சனைகள் வரை அனைத்தையும் பெண்கள் அனுபவிக்கிறார்கள். இந்த மெனோபாஸ் காலம் பெண்களுக்கு மட்டுமல்ல… ஆண்களுக்கும்தான்! ஆண்கள் வயதாகத் தொடங்கும் போது, அவர்களும் மெனோபாஸ் காலத் தொந்தரவுகளை அனுபவிக்கிறார்கள்… ஆனால், பெண்களைப் போல அல்ல. இவர்களுக்கு வேறு மாதிரி தொந்தரவுகள் வருகின்றன. அதுவும் மிக நுட்பமாக, படிப்படியாகத் தொல்லைகள் தொடங்கும்… அவை என்னென்ன அறிகுறிகள் எனப் பார்க்கலாமா…


ஆண்களில், டெஸ்டோஸ்டிரோன் போலப் பிற ஹார்மோன்களின் உற்பத்தியும் வயதாகும்போது குறைகிறது. இது ‘ஹைபோகோனாடிசம்’ (hypogonadism) என்று அழைக்கப்படுகிறது.

டெஸ்டோஸ்டீரான் குறைவுக்கான அறிகுறிகள்…

மருத்துவர்களின் கூற்றுப்படி, ஆண்களில் டெஸ்டோஸ்டிரோனின் அளவு 40 வயதிற்குப் பிறகு சராசரியாக 1% குறைகிறது. டெஸ்டோஸ்டிரோன் குறைவது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும். ஏனெனில் இது எந்த அறிகுறிகளையும் காட்டாது. இருப்பினும், பல ஆண்கள் ஹார்மோன்களின் குறைபாட்டால் அவதிப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் இதனால்தான் இந்தத் தொந்தரவுகள் வருகின்றன என அவர்களுக்கே தெரியாது.

உடலுறவுக்கான ஆசை

பல ஆண்களுக்கு வயதாகிய பின், டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உற்பத்தி செய்யப்படுவதால், அவர்களின் உடலுறவு, பாலியல் செயல்பாடுகளின் மீதான ஆசை நாளுக்கு நாள் குறைகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 50 சதவீதத்திற்கும் (50%) அதிகமானோர் 50 - 60 வயதிற்குள் விறைப்புத்தன்மை பிரச்சனைகளைச் சந்திக்கத் தொடங்குகின்றனர். 

விறைப்புத்தன்மை

ஆய்வுகளின்படி, 50-60 வயதுக்குட்பட்ட ஆண்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் விறைப்புத்தன்மையால் பாதிக்கப்படுகின்றனர். விறைப்புத்தன்மை பிரச்சனையால் குறைந்தது 20 மில்லியன் அமெரிக்க ஆண்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. தன்னிலையை அறிந்து சோகம், கவலை வரலாம். மனபிரச்சனைகளும் வரலாம். உறவுகளில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும்.

மார்பகத்தில் மாற்றம்

பல ஆண்கள் மார்பகப் பகுதியைச் சுற்றி அசௌகரியமான உணர்வால் பாதிக்கப்படுகின்றனர். சில சமயங்களில் வீக்கமும் கூடத் தோன்றும்.

கருவுற வாய்ப்புக் குறைவு

மாதவிடாய் அறிகுறிகளை அனுபவிக்கும் ஆண்களிடையே கருவுறுவதில் சிக்கல்களும் அதிகரித்து வருகின்றன. 30 வயதிற்குட்பட்ட ஆண்களின் கருவுறுதல் விகிதம் அதிகமாக இருக்கும். ஆனால், 40 வயதும் அதற்கு மேற்பட்ட ஆண்களுக்குக் கருவுறும் சதவிகிதம் குறைகிறது என்றும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால், மெனோபாஸ் கால ஆண்களுக்கும் வயதாகும் ஆண்களுக்கும் கருவுற போதிய வாய்ப்பு இல்லாமல் போகும். அதாவது குறைந்த விந்தணு உற்பத்தி, அசாதாரண விந்தணு செயல்பாடு போன்றவை பெண் கருவுற வாய்ப்பில்லாமல் தடுக்கும். அடைப்பு போன்ற காரணங்களால் வயதான ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எலும்பு தாது அடர்த்திக் குறைதல்

ஆண்கள் வயதாகும்போது, எலும்புகளில் ​​பெண்களுக்கு ஏற்படும் அதே பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். எலும்பு முறிவு, எலும்பில் உள்ள தாது அடர்த்தி இழப்புகள் ஆகியவை எலும்புகளை உடையக்கூடியதாகவும் பலவீனமாகவும் ஆக்குகிறது.

சூடான ஃப்ளாஷ்…

இதுவும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு அறிகுறியாகும். ‘ஆண்ட்ரோஜன் டிப்ரிவேஷன் தெரபி’ எனப்படும் புரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சையின் விளைவாக ஆண்களுக்கு ஹாட் ஃப்ளாஷ் தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் நம்புகின்றனர். இந்தச் சிகிச்சையானது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் செயல்படுகிறது. இதனால் அது புற்றுநோய் உயிரணு வளர்ச்சியைத் தூண்ட முடியாது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?