அண்டி Twitter
ஹெல்த்

பெப்சி குடிக்க தினமும் 2000 செலவு செய்யும் மனிதர் - அவருக்கு என்ன ஆனது?

Antony Ajay R

கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளுமே சுதந்திரம் பெற்று விட்டன. மக்கள் அனைவரும் சுதந்திர மனிதர்களாக இருக்கின்றனர். ஆனால் தனித்தனியாக பார்த்தால் நாம் அனைவரும் அடிமைகள் தான், ஏதோ ஒரு பழக்கம் நம்மை அதன் கட்டுக்குள் வைத்திருக்கத்தான் செய்கிறது. இதனை ஆங்கிலத்தில் அடிக்ஷன் எங்கிறார்கள்.

இந்த அடிக்ஷன் பொல்லாதது எந்த அளவு என்றால் சாதாரண பெப்சி குடிப்பதற்கு தினமும் 1900 ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வைக்கும். ஆம் சரியாக தான் வாசித்தீர்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் பெப்சிக்கு அடிமையாகி வருடத்துக்கு இந்திய மதிப்பில் 6.7 லட்சம் வரை செலவு செய்து வருகிறார்.

இந்த பெப்சி பழக்கத்தினால் அண்டி என்ற அந்த நபர் 120 கிலோ எடையைத் தொட்டார். இதனால் அவருக்கு நீரிழிவு நோய் வந்தது. அவருக்கு பதட்டம் அதிகரித்தது, அவர் மோசமாக உணர ஆரம்பித்தார்.

மூச்சுத் திணறல் வந்ததால் பேசுவதற்குக் கூட திணறும் நிலை வந்தது. அவர் டயட் மற்றும் உடற் பயிற்சி மூலம் 12 கிலோ எடையைக் குறைத்தார். எனினும் பெப்சி குடிக்கும் பழக்கம் குறையவில்லை.

சரி எங்கிருந்து ஆரம்பித்தது இந்த பழக்கம். ஒரு நல்ல எம்என்சி நிறுவனத்தில் வேலைப் பார்த்து வரும் அண்டிக்கு நைட் ஷிஃப்ட் தான் இந்த பழக்கம் வர முதல் காரணமாக இருந்திருக்கிறது.

பெப்சி

இரவு நேரத்தில் வேலை செய்யும் அவர் கலைத்துப் போகாமல் இருக்க தொடர்ந்து கோக் குடிக்கத் தொடங்கியிருக்கிறார். தினமும் அலுவலகத்துக்கு 2 அல்லது 3 லிட்டர் பெப்சி பாட்டில்களுடன் நுழைவாராம். அலுவலகத்தில் இருந்து காரில் வரும் போதே வீட்டுக்கு வாங்கிக்கொண்டு வந்துவிடுவாராம்.

"தினமும் காலையில் எழுந்தவுடன் நேராக ஃப்ரிட்ஜைத் திறந்து ஒரு பெரிய கிளாஸில் பெப்சி குடிப்பேன். அது இரவு வரைத் தொடரும். திருமணம் அல்லது பிறந்தநாள் போன்ற விழாக்களுக்கு போகும் போது எல்லாரும் ஷாம்பைன் குடிப்பார்கள் அப்போது நான் மட்டும் என் கிளாசில் பெப்சி ஊற்றிக் குடித்துக்கொண்டிருப்பேன்" என்கிறார் அண்டி.

20 ஆண்டுகளாக தொடர்ந்த அண்டியின் இந்த பழக்கம் அவரை மிகத் தீவிரமான உடல்நலக் கோளாறுகளுக்குள் தள்ளியது.

அதன் பிறகு அண்டி டேவிட் எனும் தெரபிஸ்டை அனுகியுள்ளார். டேவிட் அண்டி குறித்துப் பேசும் போது, "அண்டி ஒரு நாளுக்கு 10 லிட்டர் பெப்சி குடிக்கிறார் என்பதை அறிந்து நான் அதிர்ச்சியுற்றேன். மிக மோசமான அடிக்ஷன் இது. இதனால் அவருக்கு இதயக் கோளாறு அல்லது புற்று நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது." என்றார்.

தெரபிஸ்ட்டான டேவிட்டை சந்தித்த ஒரு மாதத்தில் அண்டி, 6 கிலோ எடையைக் குறைத்துள்ளார். "என்னை ஆன்லைனில் சந்தித்த டேவின் எனக்கு 40 நிமிடங்கள் மனதை வசியப்படுத்தும் சிகிச்சை மேற்கொண்டார். அவர் என்ன பேசினார் என்பது எனக்கு நியாபகம் இல்லை. ஆனால் நான் அதன் பிறகு பெப்சி குடிக்கவில்லை. அவரிடம் செல்வதற்கு முன் என் ஃப்ரிட்ஜில் 2 பாட்டில் பெப்சி இருந்தது. ஆனால் அதை கடந்த ஒரு மாதமாக தொடவில்லை" என்றார் அண்டி.

"ஆண்டி தற்போது தண்ணீர் மற்றும் இதர நல்ல பானங்களைக் குடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது" எங்கிறார் டேவிட்.

முன்பு ஒவ்வொரு ஆண்டும் ஒரு கார் வாங்கும் அளவு பணத்தை பெப்சிக்கு செலவு செய்து வந்த அண்டி தற்போது அவற்றைத் தவிர்த்து தனது உடலை பாதுகாத்து வருகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?