Never cook these 6 things in a pressure cooker Twitter
ஹெல்த்

இந்த 6 பொருட்களை பிரஷர் குக்கரில் சமைக்கவே கூடாது - என்ன காரணம்?

குக்கரில் சமைப்பதனால் பல நன்மைகள் நமக்கு இருந்தாலும் பிரஷர் குக்கரில் சமைக்கக் கூடாத சில உணவுகள் உள்ளன. அது என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Priyadharshini R

பிரெஷர் குக்கர் சமைப்பவர்களின் வேலைகளை எளிதாக்கிவிடும். சமைக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் வேலையை இதன் மூலம் நிமிடங்களில் செய்துவிடலாம். இதனால் நேரம் மட்டுமின்றி, சிலிண்டர் பயன்படுத்தும் அளவை குறைக்கிறது.

இப்படி குக்கரில் சமைப்பதனால் பல நன்மைகள் நமக்கு இருந்தாலும் பிரஷர் குக்கரில் சமைக்கக் கூடாத சில உணவுகள் உள்ளன. அது என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால், கிரீம் அல்லது தயிர் போன்ற பால் சம்பந்தப்பட்ட உணவுகள் குக்கரில் சமைக்கப்படக்கூடாது. அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் பால் பொருட்களின் தன்மை மற்றும் சுவையை அழிக்கக்கூடும்.

வறுத்த உணவுகள்

பிரஷர் குக்கரில் உணவை வறுக்க முயற்சிப்பது ஆபத்தானது. பிரெஞ்ச் ஃப்ரைஸ், பகோடாஸ் போன்ற உணவுகளை பிரஷர் குக்கரில் சமைப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

பாஸ்தா

பாஸ்தா மற்றும் நூடுல்ஸ் போன்ற மென்மையான உணவு பொருட்களை பிரஷர் குக்கரில் எளிதாக வேக வைக்கலாம். ஆனால் அவ்வாறு செய்வது ஆபத்து என்கின்றனர் நிபுணர்கள். எனவே அதை தண்ணீர் ஊற்றி பாத்திரத்தில் கொதிக்க வைத்து வேக வைப்பதே நல்லது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை எப்போதுமே குக்கரில் வேக வைப்பதுதான் பலருடைய வழக்கம். இது சாதாரணமாக தண்ணீரில் போட்டு வேக வைத்தால் நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் அதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது என்கின்றனர்.

விரைவான சமையல் காய்கறிகள்

இலை, கீரைகள் மற்றும் மென்மையான காய்கறிகள் குக்கர் சமையலுக்கு ஏற்றது அல்ல. இந்த காய்கறிகளை அதிக அழுத்தம் மற்றும் வெப்பநிலையில் சமைக்கும் போது அவற்றின் நிறங்களையும் ஊட்டச்சத்துக்களையும் இழக்கலாம்.

கேக்குகள்

பிரஷர் குக்கரில் கேக்குகள், குக்கீகள் அல்லது வேறு எந்த வேகவைத்த பொருட்களையும் பேக்கிங் செய்வது பரிந்துரைக்கப்படவில்லை. பிரஷர் குக்கர்கள் பேக்கிங்கிற்காக வடிவமைக்கப்படவில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?