பகலில் குட்டி தூக்கம் போடுபவரா நீங்கள்? இதன் பலன்கள் என்ன - புதிய ஆய்வு சொல்வதென்ன? Sleep
ஹெல்த்

பகலில் குட்டி தூக்கம் போடுபவரா நீங்கள்? இதன் பலன்கள் என்ன - புதிய ஆய்வு சொல்வதென்ன?

அடிக்கடி தூங்குபவர்களுக்கும் தூங்குவதற்கான மரபணு இல்லாதவர்களுக்கும் இடையிலான அறிவாற்றல் திறன் கொண்டு செய்யப்பட்டுள்ள ஒரே ஆய்வு இதுதான்!

Antony Ajay R

தூக்கம் நம் எல்லாருடைய நலனுக்குமே மிகவும் முக்கியம். தூக்கத்தில் பல வகைகள் இருக்கிறது. பலருக்கும் மதியத்தில் குட்டி தூக்கம் போடும் பழக்கம் இருக்கும்.

இந்த குட்டித் தூக்கம் நமக்கு ஆரோக்கியமானதா இல்லையா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் உருகுவேவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அடிக்கடி குட்டி குட்டி தூக்கம் போட்டுக் கொள்வது நம் அறிவாற்றலை மேம்படுத்தும் என்றும் டிமென்சியா மற்றும் பிற நோய்களில் இருந்து நம்மை காக்கும் என்றும் கண்டறிந்துள்ளனர்.

இதற்காக 40 முதல் 69 வயதுக்குட்பட்டுள்ள 3 லட்சத்து 80 ஆயிரம் நபர்கள் மீது சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அடிக்கடி தூங்குபவர்களுக்கும், தூங்குவதற்கான மரபணு இல்லாதவர்களுக்கும் இடையிலான அறிவாற்றல் திறன் கொண்டு இந்த ஆய்வில் ஆய்வு செய்யப்பட்டதாக சயின்ஸ் அலர்ட் இதழ் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து தூங்குவதை பழக்கமாக கொண்டவர்களுக்கு தூங்காதவர்களை விட மூளையின் அளவு பெரிதாக இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் மூளையின் வயது 2.6 முதல் 6.5 வயது வரை குறைவாக இருக்கும் என கூறுகின்றனர்.

இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் வேலண்டியா பாஸ் காலேஜ்லுடன் பல்கலைக்கழகத்தில் தலைமையில் நிபுணராக உள்ளார்.

முன்னதாக முதியோர்களை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் பகல் நேரத்தில் தூங்குவது குறுகிய கால அறிவாற்றலை மேம்படுத்துவதாகவும் தூங்காதவர்களை விட மூளை சிறப்பாக செயல்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

என்ன ஆய்வில் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பது பற்றிய குறிப்புகள் இல்லை என்றாலும் முந்தைய ஆய்வுகள் 30 நிமிடத்திற்கும் குறைவான தூக்கத்தை பரிந்துரைக்கின்றன.

இப்படி குறுகிய காலம் தூங்குவதனால் நம்முடைய இரவு தூக்கம் பாதிப்படையாமல் இருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?