சீரக தண்ணீர் மற்றும் எலுமிச்சைத் தண்ணீர் Twitter
ஹெல்த்

தண்ணீருடன் எந்தெந்த பொருட்களை சேர்த்து பருகலாம்? என்னென்ன பயன்கள் கிடைக்கும்?

NewsSense Editorial Team

தண்ணீர் மட்டும் குடிப்பதே நல்லது. மேலும் இந்தத் தண்ணீரோடு சில முக்கியப் பொருட்கள் கலந்து குடித்திட, விதவிதமான வாட்டர் ஃபாஸ்டிங் எடுக்கலாம். ஒவ்வொரு வாட்டர் ஃபாஸ்டிங் ஏராளமான பலன்களைத் தரும். அவரவரின் உடல் கழிவுகளை வெளியேற்றுவதில் ‘வாட்டர் ஃபாஸ்டிங்’ முறையை கடைபிடிப்பது, முதலிடம். வாட்டர் ஃபாஸ்டிங்கே ஒரு சிகிச்சை என இந்திய மருத்துவமுறைகள் கூறுகின்றன. மாதம் ஒருமுறை இந்த 7 வாட்டர் ஃபாஸ்டிங் வகைகளில் ஏதாவதொரு ஃபாஸ்டிங் இருப்பது நல்லது. என்னென்ன வாட்டர் ஃபாஸ்டிங் எனப் பார்க்கலாமா… மேலும், ஃபாஸ்டிங்காக இல்லாமல் தனது அன்றாட வாழ்வில் முடிந்த நாட்களில் நாம் குடிக்கும் தண்ணீர் பழக்கத்தில் இந்த மாற்றங்களைச் செய்துகொண்டும் பலன் பெறலாம்.

தண்ணீர்

தண்ணீர் உடலுக்கு அவசியம் தேவை. ஆனால், அதிக அளவிலோ குறைந்த அளவிலோ இல்லை. தேவையான அளவில் மட்டுமே… தேவையான அளவை எப்படிக் கண்டுபிடிப்பது என்றால், தாகத்தின் தேவையைப் பொறுத்துத் தண்ணீர் பருகுவது சரியான அளவு. உடலுக்குத் தேவையான அளவும் இதுதான். தாகம் இல்லாமல் இருந்து, அந்நேரம் தண்ணீர் பருகுவது உடலுக்குத் தேவையற்றது. இதனால் சிறுநீரகங்கள் மற்றும் இதன் சார்ந்த உறுப்புகளுக்குக் கூடுதல் சுமையைத் தரும். தண்ணீரைத் தேவையானபோது மட்டும் தாராளமாகப் பருகினாலே பெரும்பாலான நோய்களைத் தவிர்க்கலாம்; ஏற்கெனவே இருக்கும் நோய்களைக் குணமாக்கலாம். ஒரு நாள் முழுக்கத் தண்ணீர் மட்டுமே பருகி, வேற எதுவும் பருகாமல் பசிக்கும்போது நீர் மட்டுமே பருகி எடுக்கும் ஃபாஸ்டிங்தான் ‘வாட்டர் ஃபாஸ்டிங்’ முறை… உடலில் உள்ள 70% உடல் தொந்தரவுகளை நீக்கிவிடும். மாதம் ஒரு முறை வாட்டர் ஃபாஸ்டிங் எடுக்கலாம். அதிகப் பசி, அலசர் இருப்பவர்களுக்கு இந்த ஃபாஸ்டிங்கை பின்பற்ற முடியாது. அவர்கள் மட்டும் இதைத் தவிர்க்கவும்.

தேன் தண்ணீர்

தண்ணீரில் எந்தச் சுவை கலந்தாலும், அது உணவாகி விடுகிறது. தேன் தண்ணீர் என்பது உணவுதான். வயிறு எரிச்சல், நெஞ்சு எரிச்சல், அடிக்கடி பசி, உணவு எதுக்களித்தல், வாயு பிரச்சனை உள்ளவர்கள் தேன் தண்ணீரைப் பருகிட இந்தப் பாதிப்புகள் குறையும். தேன் தண்ணீரை பசிக்கும்போதெல்லாம் தேவையான அளவு தாராளமாகப் பருகி ஒரு நாள் முழுக்கத் தேன் தண்ணீர் சுவைத்து மட்டுமே விரதம் இருந்து வர உடலில் உள்ள கழிவுகள் கரைந்து வெளியேறும். குறிப்பாக வயிற்றுக் கழிவுகள் வெளியேறிட உதவும். இந்த ஃபாஸ்டிங்கை மாதம் ஒரு முறை எடுக்கலாம். அல்சர், அதிகப் பசி, வயிற்று எரிச்சல், நெஞ்சு எரிச்சல் இருப்பவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய ஃபாஸ்டிங் முறை. பசி மிகவும் எடுத்தால் வெள்ளரிக்காய் மட்டும் கூடுதலாகச் சாப்பிட்டு இந்த ஃபாஸ்டிங்கை கடைப்பிடிக்கலாம்.

லைம் வாட்டர்

எலுமிச்சை பழச்சாறு என்பது முழுமையான உணவு. லைம் வாட்டரில் சிறு வேறுபாடுகள் உள்ளது. குடிக்கின்ற தண்ணீரில் எலுமிச்சை பழச்சாறு மட்டும் சேர்த்துக் குடிப்பது ‘லைம் வாட்டர்’. சர்க்கரை, உப்பு, தேன் சேர்க்கக் கூடாது. குடிக்கச் சற்று புளிப்பாக இருக்கும். ஆனால் உடலுக்கு நல்லது. அனைத்து கழிவுகளையும் வெளியேற்றும். வெயிட்லாஸ் செய்பவர்கள் முயற்சி செய்யலாம். ஒரு டம்ளரில் 10-15 எலுமிச்சை சாறு சொட்டுக்கள் விட்டுக் குடிப்பதும் நல்லது. தண்ணீருக்குப் பதிலாகத் தாகம் எடுக்கையில் காலை வேளையில் குடித்திட பலன் கிடைக்கும். அனைத்து டாக்ஸிக்களும் வெளியேறும்.

டிடாக்ஸ் வாட்டர்

தண்ணீரில் எலுமிச்சை பழத்தை ஸ்லைஸாக நறுக்கிப் போடவும். மேலும், அதில் இஞ்சி ஒரு இன்ச் அளவுக்கு லேசாகத் தட்டி போடவும். கூடுதலாக ஒரு பட்டை சேர்க்கவும். இதுவும் டிடாக்ஸ் வாட்டராக செயல்படுகிறது. நச்சு நீக்கும் ஃபாஸ்டிங்கின் ஒருமுறைதான். இதில் விதவிதமான டிடாக்ஸ் வாட்டர் தயாரிக்கலாம். வெள்ளரிக்காய், வாட்டர் மெலான், எலுமிச்சை, இஞ்சி, புதினா, பட்டை, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி என விதவிதமான காம்போக்களை பயன்படுத்தி டிடாக்ஸ் செய்யும் பழக்கங்களும் உண்டு.

பிங்க் வாட்டர்

கேரளாவில் பிரபலம். பதிமுகம் எனச் சொல்வார்கள். தண்ணீரில் சிறிது பதிமுகத்தைக் கலந்து குடிக்க, தண்ணீர் பிங்க் கலராக மாறும். இவற்றைக் குடித்திட உடல் குளிர்ச்சியாக்குகிறது என ஆயுர்வேதம் சொல்கிறது. உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. செரிமான மண்டலத்தைச் சீர்படுத்துகிறது. இந்தப் பதிமுகம் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதற்கு ‘கேரளா ரெட் வுட் வாட்டர்’ என்ற இன்னொரு பெயரும் உண்டு. தண்ணீருக்குப் பதிலாகத் தண்ணீரில் பதிமுகத்தைக் கலந்து தண்ணீராகக் குடிக்கும் பழக்கம் கேரள மக்களுக்கு உண்டு. இங்கும் சில கேரள உணவகத்தில் வழங்கப்படுவதைப் பார்க்கலாம்.

சீரகத் தண்ணீர்

சீரகத் தண்ணீர்

சீரகத் தண்ணீரும் கேரளத்தில் மிக பிரபலம். இங்குத் தமிழ்நாட்டில் சிலர் சீரகத் தண்ணீர் குடிப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. சரும நோய்களைப் போக்கும். அக உடல் சுத்தமாகும் எனச் சொல்லப்படுகிறது. சீரக நீர், உடலில் பல நன்மைகளைச் செய்கிறது. அசைவ உணவுகள் சாப்பிடும் நாட்களில் சீரகத் தண்ணீர் குடிக்கப் பலன் கிடைக்கும். செரிமானத்துக்கு உதவும். வயிறு தொல்லை இருப்பவர்கள் சீரகத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

கொடம்புளி வெயிட்லாஸ் டிரிங்க்

கேரள மக்கள் இந்தக் கொடம்புளியில்தான் சமையல் செய்வார்கள். மீன் குழம்புகூடக் கேரள மக்கள் இந்தக் கொடம்புளியில்தான் செய்வார்கள். சுவையானது… மருத்துவக் குணமுடையது. நாம் பயன்படுத்தும் புளி உடலுக்குக் கேடு. ஆனால், இந்தக் கொடம்புளி பல மருத்துவப் பலன்களைக் கொண்டது. கொடம்புளி டிரிங்க் குடிக்க, எடை குறையும். கெட்ட கழிவுகள் நீங்கும். உடலின் சூட்டைத் தணிக்கும். சருமம் பொலிவு பெறும். பாதுகாப்பான, இயற்கையான முறையில் வெயிட் லாஸ் செய்யச் சிறந்த வழி இது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?