நாள் முழுக்கச் சோர்வாகவே இருப்பது ஏன்? Twitter
ஹெல்த்

சரியாகச் சாப்பிட்டாலும், தூங்கினாலும் கூட நாள் முழுக்கச் சோர்வாகவே இருப்பது இதனால்தான்

தூங்கி எழுந்தாலும் சரி, உணவு உண்ட பின்னும் சரி, காலை, மாலை, இரவு என எப்போதுமே சோர்வாக உணர்வதற்கு என்ன காரணம்? பார்க்கலாம்.

மினு ப்ரீத்தி

முழுமையாக 8 மணி நேரம் தூங்கிய பிறகும் சோர்வாகவே உணர்கிறார்கள் சிலர். நன்றாகச் சாப்பிட்டாலும் எனர்ஜியே இல்லாமல் சோர்வாகக் காணப்படுவர். தூங்கி எழுந்தாலும் சரி, உணவு உண்ட பின்னும் சரி, காலை, மாலை, இரவு என எப்போதுமே சோர்வாக உணர்வதற்கு என்ன காரணம்? பார்க்கலாம்.

லைஃப்ஸ்டைல் பழக்கங்கள்

பசி இல்லாமலே வேளாவேளைக்குச் சாப்பிடுவதால், உடல் செரித்து, செரித்துச் சோர்ந்து போய்விட்டது. ஆதலால் சோர்வான உணர்வு வருகிறது. பசி எடுக்காவிட்டால் சாப்பிட வேண்டிய அவசியமில்லை. பசி ஒருவேளை எடுத்தாலும் ஒரு வேளை மட்டும் சாப்பிடுங்கள். பசி இல்லாத போது சாப்பிட்டால், உடல் கழிவு நீக்குவதை விட்டுவிட்டுச் செரிக்கத் தன் சக்தியை பயன்படுத்தும். வெறுமனே செரித்து, செரித்தே உடலின் ஆற்றல் வீணாகிவிடுவதால் கழிவுகள் அப்படியே தங்கிவிடுகிறது. உடலும் சோர்ந்து விடுகிறது. அதீத உணவு, கட்டாயம் நோயாக மாறும்.

ரத்தசோகை

ஆக்ஸிஜனை உடலுக்குள் எடுத்துச் செல்ல தேவையான சிவப்பணுக்கள் இல்லாமல் இருப்பது… உடலில் குறைவாக ஆக்ஸிஜன் இருந்தால், மிகக் குறைவான எனர்ஜிதான் உடலில் இருக்கும். அதிக அளவு சோர்வும் கவலை நிறைந்த முகமாக மாறக்கூடும். தொடர்ந்து சோர்வாகவே இருந்துகொண்டே இருந்தால், அவர்கள் ரத்தசோகையால் பாதித்து இருக்கலாம்.

செலியாக் நோய்

பலருக்கும் தெரியாத பிரச்சனை இது. ஆனால் பலர் இதனால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். தான் பாதிக்கப்பட்டது தெரியாமலே சில உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். உடல் குளுட்டன் எனும் புரோட்டீனை வேண்டாம் என ஒதுக்கும். அதாவது உடலுக்கு, குளுட்டனால் அலர்ஜி ஏற்படும். இந்த குளுட்டன் எதில் கொட்டி கிடைக்கிறது தெரியுமா? கோதுமையில்… கோதுமை, மைதா பொருட்களில் கொட்டி கிடக்கின்றன. சப்பாத்தி, பூரி, பரோட்டா, பிஸ்கெட், கேக் போன்ற அனைத்திலும் அலர்ஜி ஏற்படுத்தும் குளுட்டன் உள்ளது. இது அதிக அளவில் உடலில் சேர, சோர்வு, ரத்தசோகை, வயிறு வலி, வயிற்றுப்போக்கு, வயிறு எரிச்சல், நெஞ்செரிச்சல், எடை அதிகரிப்பு / குறைதல் போன்ற தொந்தரவுகள் வரலாம். குளுட்டன் இல்லாத உணவுகளைச் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்கள், அரிசி வகைகள், சிறுதானிய வகைகள், பயறுகள், தேங்காய் ஆகியவை நல்லது.

தூக்கம் இல்லாதது

இரவு மிகவும் தாமதமாகத் தூங்கும் பழக்கத்தில் இருப்பவர், இரவு 8 மணிக்கு மேலும் அதிக அளவு மொபைல், லேப் டாப், டிவி பார்ப்பது… நாள் முழுக்க கேட்ஜெட்ஸ் பயன்படுத்துவது, உடலுறுப்பு இல்லாமல் இருப்பது, உடலில் மலம் தங்கி இருப்பது, இரவு 8 மணிக்கு மேல் அதிக அளவில் உணவு எடுப்பது ஆகிய காரணங்களால் தூக்கமின்மை தொந்தரவுகள் வரலாம். தூக்கம் சீராக இல்லையெனில் அதிக அளவு சோர்வு இருக்கலாம்.

மன அழுத்தம்/ மனச்சோர்வு

கவலை, பயம், தனிமை, பொருளாதாரச் சுமை போன்ற மனப்பிரச்சனைகளால் தூக்கம் இல்லாமல், உடலைப் பாதித்துச் சோர்வு உண்டாகலாம். மனதில் ஏதோ சிந்தித்துக்கொண்டே இருப்பது, பயத்தை அனுபவிப்பது போன்றவை உடலை வெகுவாகப் பாதிக்கும். இதனால், சோர்வு உண்டாகும்.

தொடர் வலி

முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி என ஏதோ வலி இருந்துகொண்டே இருக்கும். ஆதலால், தூக்கம் சரியாக இல்லாமல் இருக்கும். சோர்வு உண்டாகலாம். வலி இருக்கிறது என்றால் அங்குக் கழிவு உள்ளது. கழிவு என்பதி திடக் கழிவு, திரவக் கழிவு, காற்று கழிவு… இக்கழிவுகள் நீங்க உணவுப் பழக்கமும் வாழ்வியல் பழக்கமும் சீராக இருக்க வேண்டுமே தவிர மாத்திரைகள் பயன் தராது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?