முடி உதிர்வு News Sense
ஹெல்த்

முடி கொட்டுவது நிற்கவும் மீண்டும் வளரவும் என்ன சாப்பிடலாம்? என்ன செய்ய வேண்டும்?

மினு ப்ரீத்தி

பொதுவாக நம் தலையில் 90 சதவிகிதம் முடிகள் வளரும் நிலையில் இருக்கும், 10 சதவிகிதம் முடிகள் உறங்கிக் கொண்டிருக்கும். ஓய்வு நிலையைக் கடந்த பின், முடிகள் உதிரத் தொடங்கும். புது முடிகளும் வளரும். அதாவது 50 முதல் 100 முடிகள் வரை உதிர்ந்தால், அது இயல்புதான்.. முடி, புரதத்தால்தான் உருவாகிறது. முடி வளர்வதற்கு அமினோ அமிலங்களும், புரதமும் அவசியம். இறைச்சி, மீன், முட்டை, நட்ஸ், பயறு வகைகள், சிக்கன், சோயா ஆகியவற்றில் புரதம் நிறைந்துள்ளது.

அத்திப்பழம், பேரீச்சை, நட்ஸ் வகைகள், காய்கறி, பழங்கள் ஆகியவை கூந்தல் வளர்ச்சிக்குப் பலம் தரும். எலும்பு வளர்ச்சிக்கு உதவும் கால்சியம் முடி வளர்ச்சிக்கும் துணைபுரிகிறது. கால்சியம் சத்து, எள் மற்றும் கேழ்வரகில் அதிகம் இருக்கிறது.

பசித்த பிறகு உணவுச் சாப்பிடும் பழக்கம், உடலில் கழிவுகள் சேருவதைத் தடுக்கும். முடி கொட்டவும் செய்யாது. ஏனெனில் பசித்த பிறகு சாப்பிடுவதால், சாப்பிடும் உணவிலிருந்து சத்துகள் நேரடியாக உடலுக்குச் செல்லும். செரிமானம் சீராக இருப்பதால், சத்துகளும் சீராக கிரகிக்கும். முடிக்கு தேவையான சத்துகளும் கிடைக்கும்.

முடி உதிர்வு

அதேபோல, இரவு தூக்கம் 9 மணிக்கே இருக்க வேண்டும். அப்போது உடலில் வெப்பம் முழுமையாகத் தணியும். கல்லீரல் கழிவுகள் நீங்கும். தேவையான ஹார்மோன்கள் சீராகச் சுரக்கும். முடி கொட்டாது. சாதாரணமாகக் கொட்டும் முடிகளும் மீண்டும் வளரும். தூக்கம் இல்லாத நபருக்குத் தலை முடி அதிகம் கொட்டும். காரணம், இரவு தாமதமாகத் தூங்குவோருக்கு முடிகள் அதிகம் உதிரும்.

கூந்தல் கருப்பாக மாற… பலா இலை, செம்பருத்தி, நெல்லி முள்ளி, கறிவேப்பிலை நான்கையும் சம அளவு எடுத்து, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். இதை நல்லெண்ணெய்யில் போட்டுக் காய்ச்சிவைத்துக்கொண்டு, தினமும் தேய்த்துவர, செம்பட்டை முடி கறுப்பாக மாறும். இளநரைக்கு பலன் அளிக்கும். 40+ வயதினருக்கு பலன் அளிக்காது.

100 கிராம் ஆவாரம் பூ, வெந்தயம் 100 கிராம், பயத்தம் பருப்பு அரைக் கிலோ என மூன்றையும் மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலையை அலசிவர உடல் சூடு தணியும். கருகருவெனக் கூந்தல் பிரகாசிக்கும்.

கருமையான கூந்தல்

பேரீச்சம்பழம் 100 கிராம் எடுத்து கொட்டையுடன் தட்டி, அதில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டு இறக்குங்கள். மறுநாள், ஊறிய பேரீச்சம்பழத்தை அரைத்து, சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணெய்யை சில சொட்டுகள் தலையில் தேய்த்து மசாஜ் செய்தால், கருமையாகக் கூந்தல் வளரும்.

ஒரு கொத்துக் கறிவேப்பிலையை, அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து, புளித்த மோரில் ஊறவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை இந்த பேஸ்ட்டை தலையில் பேக் போட்டு பத்து நிமிடங்கள் கழித்து அலச, கூந்தல் கருகருவென மாறும். முடி மென்மையாக இருக்கும்.

அதிகம் செலவு இல்லாத தூயத் தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் முறையை இப்போது பார்க்கலாம். எண்ணெய் தடவலாமா என்ற குழப்பம் பலருக்கு இருக்கும். எண்ணெய் தடவுவது நல்லது. ஆனால் அந்த எண்ணெய் கலப்படம் இல்லாததாக இருத்தல் மிக அவசியம். தேங்காய்ப் பாலை எடுத்து அவற்றை அடுப்பில் கொதிக்கவிடவும். இறுதியில் கிடைக்கும் திரவமே தூயத் தேங்காய் எண்ணெய். இதைத் தடவிவர கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் சத்தாக மாறுகிறது. எண்ணெய் காய்ச்சும் போது, இறுதியில் தேங்கும் கசடை, தூக்கி எறியாமல் ஹேர் பேக்குடன் பயன்படுத்திக்கொள்ளலாம்.

முடி சாஃப்டாக இருக்க என்ன செய்யணும் எனப் பார்க்கலாம். 8-லிருந்து 10 செம்பருத்தி இலைகளை 10 நிமிடங்கள் வரை தண்ணீரில் ஊறவைத்து அதைப் பசையாக மாற்றிக்கொள்ளவும். ஜெல் போலக் கூந்தல் முழுவதும் தடவிய பின், ஒரு மணி நேரம் கழித்து, கூந்தலை மிதமான ஷாம்பூவால் அலச வேண்டும். பளபளப்பான, மென்மையான கூந்தலாக மாறியதைப் பார்க்கலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?