நம் எல்லோருக்குமே இனிப்புகள் இஷ்டம். கேக், சாக்லேட், ஐஸ்க்ரீம் எனத் தொடங்கி குலாப் ஜாமுன், ஜிலேபி ஏன் பாயாசம் வரை, இனிப்புகளுக்கு நம்மில் பலரும் அடிமை.
இதன் சுவை நமக்கு இதமான ஒரு உணர்ச்சியை தருவதால் தான் மற்ற சுவைகளை விடவும் இனிப்புகளை விரும்புவோர் அதிகம்.
ஆனால் நாம் விரும்பி சாப்பிடும் இந்த ஸ்வீட்கள் பெரும்பாலும் வெள்ளை சர்க்கரையால் ஆனவை. பல ஆண்டுகள் கழித்து இப்போது தான் இந்த வெல்லமும், கருப்பட்டியும், நாட்டு சர்க்கரையும் டிரெண்டில் உள்ளது.
எனினும் வைட் சுகரில் செய்யும் இனிப்புகளுக்கு இருக்கும் மவுசு மற்றவைக்கு இல்லை. இந்த இனிப்புகளை நாம் தொடர்ந்து சாப்பிட்டால் சரும பிரச்சினைகள் உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகள் வரும்.
ஒரு வேளை இந்த சர்க்கரையை நாம் ஒரு மாதம் சாப்பிடாமலேயே இருந்தால் என்ன ஆகும்? இந்த பதிவில்...
நமது தினசரி உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை இல்லாமல் எக்ஸ்ட்ராவாக சேர்க்கப்படும் இந்த added sugar உணவுகளை தவிர்த்தால், தேவையற்ற உடல் பருமன் குறையும்.
முறையாக உடற்பயிற்சியும் செய்து வர, தேவையற்ற கலோரிகள் உடலுக்கு செல்லாமல் இது தடுக்கிறது
அளவுக்கு அதிகமாக சர்க்கரை சாப்பிடுவதால், ரத்த சர்க்கரை அளவில் சம நிலையின்மை ஏற்படலாம். அது சீராக இந்த added sugarsஐ தவிர்க்கலாம்.
இதனால் நாம் எளிதில் சோர்வும் அடையமாட்டோம்.
சர்க்கரை அதிகமாக சாப்பிடாமல் இருந்தால், இதய நோய், வகை 2 டயாபிட்டீஸ், உடல் பருமன் போன்ற நாள்பட்ட நோய்கள் எனப்படும், chronic diseaseaஐ தவிர்க்கலாம்
சருமத்தில் ஏற்படும் டிரைனஸ், பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கும். சருமம் பளபளப்பாகும். மேலும் இந்த வைட் சுகர் சாப்பிடுவதால் தான் நமக்கு கிரேவிங்ஸ் ஏற்படுகிறது. அதுவும் குறையும்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust