கனவு எனும் வார்த்தையே கொஞ்சம் மர்மமானதும் அதிசயமானதும் ஆகும்.
ஏனென்றால் கனவுகள் குறித்து நமக்கு முழுமையாக தெரியாது. சில நாட்காளில் நமக்கு என்ன கனவு வந்தது என்று கூட மறந்துவிடுவோம்.
கனவுகள் நம் வாழ்க்கையுடன் தொடர்புடையதா? உறக்கத்தில் வந்து செல்லும் கனவுகள் நம் வாழ்வில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா?
கனவின் பெரும்பகுதியை நாம் விழிக்கும் போது மறந்துவிடுகிறோம். ஆனால் மாற்றவே முடியாத படி கனவுகளால் நமக்கு ஏற்படும் உணர்வுகள் நம் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன!
கனவுகள் என்பது என்ன? அறிவியல் கனவைப் பற்றி என்ன சொல்கிறது? நாம் ஏன் கனவு காண்கிறோம்? பார்க்கலாம்...
கனவு என்பது நாம் கண்ட காட்சிகள், நமது சிந்தனைகள், நாம் உணர்ந்த உணர்வுகள் ஆகியவற்றின் கலவையாக நம் அனுமதி இல்லாமல் நம் தூக்கத்தில் வெளிப்படுபவையாகும்.
கனவுகளில் தோன்றும் தோற்றங்கள், சத்தங்கள், அசைவுகள் ஆகியவை எங்கிருந்து வருகின்றன என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும் இருக்கின்றன.
கனவுகள் குறித்து அறிவியலை விட தத்துவங்களும் மதங்களும் அதிகமாகப் பேசுகின்றன. உலகில் பல நம்பிக்கைகளைக் கொண்டிருக்கும் மக்கள் கனவுகள் நடக்கவிருக்கும் நிகழ்வுக்கான முன்னெச்சரிக்கை என்று அழைக்கின்றன.
அமெரிக்க சூ பழங்குடி மக்கள் கனவுகாண்பதையும் அந்த கனவுகளில் சொல்லப்பட்டபடி நடப்பதையும் வாழ்வியல் கடனாக நம்பினர். கனவுகள் மூதாதையர்களால் சொல்லப்படுபவை எனக் கருதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்மால் நினைவுபடுத்தப்படக் கூடிய கனவுகளுக்கு விளக்கம் கொடுத்து அதன் மூலம் சொல்லவரும் செய்தி இதுதான் என கணிக்கக் கூடிய மக்கள் கிட்டத்தட்ட எல்லா கலாச்சாரங்களிலும் இருந்திருக்கின்றனர்.
கனவுகள் குறித்து படிக்கும் அறிவியலுக்கு ஒனெய்ராலஜி ( oneirology ) என்று பெயர். கனவுகள் நம் கடந்த காலத்தின் பிரதிபலிப்புகள் மட்டும் தானா? அல்லது எதிர்காலத்தின் முன்னோட்டமா? என்பது கனவுகளை ஆய்வு செய்பவர்களின் முன்நிற்கும் முக்கிய கேள்வியாகும். இதுகுறித்து முரண்பாடான கருத்துகள் இருக்கின்றன.
நாம் ஏன் கனவு காண்கிறோம் என்பது குறித்தும் பலதரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. பலர் கனவுக்கு எந்த அர்த்தமும், பணியும் கிடையாது. உறக்கத்தில் இருக்கும் மூளையின் தேவையற்ற செயல்பாடு தான் கனவு என்கின்றனர்.
சிலர் கனவுகள் நம் மனநலத்துக்கும், உணர்வுகளுக்கும் முக்கியமானவை எனக் கூறியுள்ளனர். சில அறிவியல் ஆராய்ச்சிகளும் கனவுகள் மனநலத்துடன் தொடர்புடையவை என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
நம் வாழ்வில் 3ல் ஒரு பங்கை நாம் தூக்கத்தில் தான் செலவிடுகிறோம். எனில் நாம் எவ்வளவு நேரத்தை தூக்கத்தில் செலவு செய்கிறோம்?
நாம் எவ்வளவு சிந்தித்தாலும் எவ்வளவு நேரம், எவ்வளவு நீளமான கனவைக் கண்டோம் என்பது நமக்குத் தெரியாது. கனவுகள் குறித்து அறிவியலாளர்கள் இன்னும் கண்டுபிடிக்க வேண்டிய விஷயங்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன.
விலங்குகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் நவீன ஆராய்ச்சி முறைகளின் வழியாக கனவு காண்பது நினைவாற்றல், கற்றல் மற்றும் உணர்ச்சிகளில் பங்கு வகிக்கலாம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இன்றும் கனவின் அர்த்தம் என்ன? கனவு எப்படி ஏற்படுகிறது என்பதை கண்டுபிடுக்கும் அளவு நம்மிடம் அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ச்சியடைவில்லை.
ஆனால் அறிவியல் இவ்வளவு தொடக்க நிலையில் தான் இருக்கிறது என்பது ஆச்சரியமில்லை. ஏனெனில் நாம் ஏன் தூங்குகிறோம் என்பதையும், ரெம் தூக்கம் ஏன் ஏற்படுகிறது என்பதையும் கூட அறிவியலால் விளக்க முடியவில்லை.
வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் கனவு ஏன் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு அறிவியலிடம் திட்டவட்டமான பதில் கிடையாது. ஆனால் கனவு குறித்த இரண்டு கருத்துகள் பெரும்பாலாக ஏற்றுக்கொள்ளப்படுள்ளன.
1. கனவுகள் நம்மை நிஜ உலகுக்கு தயார் செய்கின்றன
இந்த தியரியின் படி கனவுகள் நம்மை நிஜ வாழ்வின் அச்சுறுத்தல்களுக்கு தயார் செய்கின்றன. கைவிடுதல், கோபம், பயம் மற்றும் பதட்டம் போன்ற எதிர்மறை எண்ணங்களே அதிகமாக கனவாக தோன்றுகின்றன.
நாளை நமக்கு என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாத நிலையில், பயம் போன்ற உணர்வுகளை முன்னதாகவே தோற்றுவித்து நம்மை எச்சரிக்கிறது மூளை என்கின்றனர்.
இந்த தியரியின் படி கனவில் பயம், பதட்டத்தை அனுபவிப்பவர்கள், நிஜவாழ்வில் இந்த உணர்வுகளுக்கு தயாரானவர்களாக சிறப்பாக சூழ்நிலைகளை கையாள்பவர்களாக, வலிமையான நரம்பு மண்டலத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆனால் நம் மூளைக்கு நாளைக்கு நடக்கப்போகிற விஷயங்கள் எப்படித் தெரிந்திருக்க முடியும்?
2. கனவுகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை
நாம் கடினமான வேலைகளைச் சேய்யும் போதும், குழப்பான சிந்தனைகளில் ஈடுபடும் போதும் மூளையில் நடைபெறும் மின்னியல் செயல்பாடுகள் தான் கனவும் கூட. இது நாம் தூங்குவதால் வருகிறது.
நாம் தூங்கும் போது நம் மூளையும் தூங்குகிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படியல்ல நம் மூளையின் தன்னிச்சையான பகுதிகள் நாம் உறங்கும் போதும் இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.
நம் மூளை கலைந்து கிடக்கும் நம் நினைவுகளை ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கும். நாம் ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்கும் போது அது தொடர்பான அனைத்தும் நம் நினைவுக்கு வரும்படியான இணைப்புகளை அப்போது மூளை மேற்கொள்ளும்.அப்போது மூளையில் இருக்கும் குப்பைகளும் அகற்றப்படும்.
ஆக மூளையின் இந்த செயல்பாடுகளின் போது வெளித்தோன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத நினைவுகளே கனவுகள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust