பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் கையில் மூக்கை வளர்த்து அதனை வெற்றிகரமாக முகத்தில் பொருத்தியுள்ளனர் மருத்துவர்கள்.
2013ம் ஆண்டு அந்த பெண் மூக்கில் ஏற்பட்ட கேன்சருக்குக்காக சிகிச்சை மேற்கொண்டார். ரேடியேஷன் தெரெபி மற்றும் ஹீமோ தெரபி மூலம் அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் அவரது மூக்கின் பெரும் பகுதியை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் சில வருடங்களாக அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இறுதியாக அவரது துன்பத்துக்கு விடுதலை கிடைத்துள்ளது.
பிரான்ஸ் நாட்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்த புதிய மைல் கல்லை எட்ட மிகுந்த சிரத்தை எடுத்துள்ளனர்.
முதலில் அவரது அறுவைசிகிச்சைக்கு முந்தையப் படங்கள் மூலம் மூக்கின் வடிவத்தைக் கண்டறிந்து அதனை 3டியில் அச்சிட்டனர். இதற்காக அவரது மூட்டிலிருந்து cartilage என்ற பொருளைப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த மூக்கின் வடிவ அமைப்பை அவரது முழங்கையில் பொருத்தினர். அதிலிருந்து அவருக்கு தோல் மற்றும் திசுக்கள் வளர்ந்திருக்கிறது.
இரண்டு மாதங்கள் கழித்து அவரது மூக்கு அறுவை சிகிச்சை மூலம் முகத்தில் பொருத்தப்பட்டது. மைக்ரோ அறுவை சிகிச்சைகள் மூலம் இரத்த நாளங்களை பொருத்தியுள்ளனர்.
இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை உலக அளவில் கவனம் ஈர்த்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டு மருத்துவர்கள் பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust