Pitbull News Sense
இந்தியா

Pitbull, Rotweiler நாய்களுக்கு தடை - செல்ல பிராணிகளை வளர்க்க என்னென்ன நிபந்தனைகள் ?

இந்த வகை நாய்கள் பத்து வயது சிறுவன் முதல் சாலையில் நின்றுக்கொண்டிருந்த பசுமாடு வரை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலானது.

Keerthanaa R

பிட்புல், ராட்வீலர் மற்றும் டாகோ அர்ஜென்டீனோ ஆகிய மூன்று வகை நாய்களை செல்ல பிராணிகளாக வீட்டில் வளர்க்க காசியாபத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மிகவும் ஆக்ரோஷமான நாய் வகைகளில் ராட்வீலர், பிட்புல் ஆகியவை அடங்கும். அமெரிக்கா போன்ற நாடுகளில் வீட்டு வளர்ப்பு இனமாக இவை இருக்கிறது. ஆனால், இவற்றின் குணம் காரணமாக இவைகளின் மீது பயமும் அதிகமாக இருக்கும்.

சமீப காலங்களில் இந்த வகை நாயை இந்தியாவிலும் சிலர் வீட்டில் வளர்த்து வந்தனர். அந்த நாய்கள், குழந்தைகள், அவற்றின் உரிமையாளர் என பலரையும் தாக்கி அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

Dog

லக்னோவில் ஒரு பெண்ணை இந்த பிட்புல் வகை நாய் கடித்து கொன்றது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த வகை நாய்கள் பத்து வயது சிறுவன் முதல் சாலையில் நின்றுக்கொண்டிருந்த பசுமாடு வரை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து கான்பூர் மேயர் இந்த வகை நாய்களை வீட்டில் வளர்க்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் காசியாபாத் மாநகராட்சி தற்போது மூன்று வகை நாய்களை வீட்டில் வளர்க்க தடை விதித்துள்ளது. பிட்புல், ராட்வீலர், மற்றும் டாகோ அர்ஜென்டீனோ ஆகிய மூன்று வகை நாய்களை செல்ல பிராணிகளாக வளர்க்க அனுமதியில்லை என தெரிவித்துள்ளது.

"பிட் புல், ராட்வீலர் மற்றும் டாகோ அர்ஜென்டினோ ஆகிய மூன்று இனங்களும் ஆக்ரோஷமானவை. இந்த நாய்களை வளர்க்க அனுமதி இல்லை. இவற்றில் ஒன்றை யாராவது வாங்கினால், அவர்களே பொறுப்பேற்பார். இந்த மூன்று வகை நாய்களும் காசியாபாத்தில் தடை செய்யப்பட்டுள்ளன" என்று பாஜக தலைவரும் ஜிஎம்சி கவுன்சிலருமான சஞ்சய் சிங் ஞாயிற்றுக்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மற்றும் சில நிபந்தனைகளை விதித்துள்ள மாநகராட்சி, இது நவம்பர் முதல் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது

பிட்புல்

செல்ல பிராணிகளை வளர்ப்பவர்கள் ஒன்றுக்கு மேல் செல்ல பிராணி வைத்துக்கொள்ளக் கூடாது. அபார்ட்மன்ட்களில் வசிப்பவர்கள் வளர்ப்பு பிராணிகளை கூட்டிசெல்ல சர்வீஸ் லிப்ட் தான் பயன்படுத்தவேண்டும்.

தடை செய்யப்பட்டுள்ள இனவகைகளை முன்னரே வளர்ப்பவர்கள் அவற்றுக்கு இரண்டு மாதங்களுக்குள் கருத்தடை செய்துவிடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதே போல, தெருநாய்களுக்கு உணவளிக்க விரும்புவோரும், குறிப்பிட்ட இடத்தில் அவற்றிற்கு உணவளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?