5 facts about feeding cats every pet parent should know Twitter
இந்தியா

பூனை வளர்ப்பவரா நீங்கள்? : பூனைகளுக்கு உணவளிப்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 உண்மைகள்

உங்கள் பூனையை ஒரு நாளைக்கு பல முறை சாப்பிட அனுமதிக்காதீர்கள் மற்றும் அதன் தினசரி உணவுக்கான நேரத்தை நிர்ணயிப்பது நல்லது. இப்படி பூனைகளுக்கு உணவளிப்பது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Priyadharshini R

பூனை வளர்க்கும் சிலருக்கு அவற்றிற்கு என்ன உணவு கொடுக்க வேண்டும், எவ்வளவு நேர இடைவெளியில் உணவு வழங்க வேண்டும் என்பது சரியாக தெரியாது.

பூனையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.

உங்கள் பூனையை ஒரு நாளைக்கு பல முறை சாப்பிட அனுமதிக்காதீர்கள் மற்றும் அதன் தினசரி உணவுக்கான நேரத்தை நிர்ணயிப்பது நல்லது.

அவை அதிகமாகச் சாப்பிடுவதில்லை என்பதை மட்டும் உறுதிப்படுத்தாமல் சரியான ஊட்டச்சத்தை பெறுகிறதா? என்பதை உரிமையாளார்கள் உறுதி செய்யும் வேண்டும். பூனைகளுக்கு உணவளிப்பது பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 தகவல்களை இங்கே காணலாம்.

பூனைகள் கட்டாயமான மாமிச உண்ணிகள்

விலங்கு அடிப்படையிலான புரதம் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட உணவுகள் பூனைகளுக்கு தேவையாக உள்ளது.

அவை உண்ணும் தாவர அடிப்படையிலான புரதங்களை காட்டிலும் , இறைச்சி மற்றும் எலும்பு போன்ற விலங்கு திசுக்களில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவைப்படுகிறது.

பூனைகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேவை

டாரைன் என்பது பூனைகளுக்கு அவற்றின் உணவில் தேவைப்படும் அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இதய ஆரோக்கியம், பார்வை, இனப்பெருக்க மற்றும் நரம்பு மண்டலங்களின் சரியான செயல்பாடு உள்ளிட்ட பல உடலியல் செயல்பாடுகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

பெரும்பாலான வணிக பூனை உணவுகளில், பூனைகள் இந்த அமினோ அமிலத்தை தேவையான அளவு பெறுவதை உறுதி செய்வதற்காக டாரைன் சேர்க்கப்பட்டுள்ளது.

ஈரமான உணவு மற்றும் அதன் நன்மைகள்

உலர் உணவுகளை காட்டிலும் நீர் ஆகாரமுள்ள உணவுகள் பூனை விரும்பி உண்ணும். இது அவற்றை நீரேற்றமாக வைத்திருக்கும் மற்றும் உலர் உணவுடன் ஒப்பிடும்போது அதிக அளவு விலங்கு அடிப்படையிலான புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்க முடியும்.

பூனை உணவில் மீன்கள்

மீன் விலங்கு அடிப்படையிலான புரதம் மற்றும் பூனைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.

பூனை உணவுக்கான சில பொதுவான மீன் சுவைகள்

டுனா: இதில் புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது, இது பூனையின் தோல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

சால்மன்: இது புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. மேலும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களான பி வைட்டமின்கள், வைட்டமின் டி மற்றும் கால்சியம் ஆகியவற்றிலும் நிறைந்துள்ளது.

அதிகப்படியான உணவு உடல் பருமனுக்கு வழிவகுக்கும்

உடல் பருமன் என்பது பூனைகளில் ஒரு பொதுவான பிரச்னையாகும்.

நீரிழிவு, மூட்டு பிரச்னைகள், சிறுநீர் பாதை பிரச்னைகள் மற்றும் ஆயுட்காலம் குறைதல் உள்ளிட்ட கடுமையான உடல்நல விளைவுகளை ஏற்படுத்தும்.

பூனைகளில் உடல் பருமனுக்கு பங்களிக்கும் காரணிகள் அதிகப்படியான உணவு, ஒரே இடத்தில் இருக்கும் வாழ்க்கை முறை, அதிக கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த புரதம் கொண்ட உணவு ஆகியவை அடங்கும்.

பூனைகளின் உடல் பருமனை தடுக்க, சமச்சீர் உணவை உண்பது மற்றும் சரியாக உடற்பயிற்சி செய்வது (விளையாடுவது) முக்கியம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?