இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள், பாரம்பரியத்துக்கு எந்த அளவு பிரபலமோ அந்த அளவு அதன் வழிபாடுகளுக்கும் முக்கியமானது. இந்த முக்கியத்துவம் நம் மக்களுக்கு தெரியுமோ என்னவோ, நமது நாட்டில் கட்டப்பட்டுள்ள திருத்தலங்கள் மற்றும் கோவில்களைப் பார்ப்பதற்காக வெளிநாட்டினர் கொடுக்கும் ஆர்வம் நம்மை பிரமிக்கவைக்கிறது.
இப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்ட நம்மவர்கள் மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளிலும் மிகச்சிறந்த கட்டமைப்பில் கோவில்களை உருவாக்கி இருக்கின்றனர். அந்த வகையில், வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போது நீங்கள் மிஸ் செய்யக் கூடாத சில கோவில்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
கோவில்கள் என்று சொன்னாலே கடவுள், பக்தி என்பதை எல்லாம் தாண்டி நமக்கு நினைவு வருவது அதன் கட்டிடக்கலை தான். நேபாளத்தின் காட்மண்டு பகுதியியில் அமைந்துள்ளது பசுபதிநாத் சிவன் கோயில்.
இந்த கோவில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தால் அங்கீகரிக்கப்பட்ட பழமையான இந்து கோவிலாகும். இது எப்போது நிறுவப்பட்டது என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இருப்பினும் இங்கு சென்றால் மக்கள் தங்களது விருப்பங்கள் நிறைவேறும் என்று நம்புகின்றனர் .
பாறை அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோவில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளது. கடல் கடவுளைக் கொண்ட இந்த கோவில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சுற்றிலும் கடலால் சூழப்பட்டுள்ள இந்த கோவில் கண்டிப்பாக பயணிகளை ஈர்க்கும்
கி.பி 802 மற்றும் 1220 காலத்தில் கட்டப்பட்ட அங்கோர் வாட் கோவில் வடமேற்கு கம்போடியாவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மனித கட்டிடக்கலைக்கு மிகப்பெரிய சான்றாக கருதப்படுகிறது.
ஏனென்றால், இந்த கோவில் 100க்கும் மேற்பட்ட கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கோவில்களின் தொகுப்பாகும். இங்கு செல்லும் மக்களுக்கு அதன் கட்டட அமைப்பு நிச்சயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
சுமார் 42.7 மீ உயரமுள்ள முருகனின் சிலையைக் கொண்டுள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஸ்வாமி தேவஸ்தானம் உலகப் புகழ் பெற்றது.
பட்டு குகை என்று அழைக்கப்படும் இந்த கோவில் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூருக்கு அருகில் அமைந்துள்ளது. 1890 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவில் ஆண்டு தோறும் பல கோடிக்கணக்கான மக்களை ஈர்த்து வருகிறது.
1871 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்ரீ காளி கோவில் பர்மாவின் கட்டிடக்கலைக்கு சிறந்த சான்றாக இருக்கிறது. இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அங்குள்ள வண்ணமயமான பிரகாசம் மற்றும் இந்து கடவுள்களின் அழகிய கல் சிற்பங்கள் போன்றவற்றால் மக்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.
இந்த கோவில் பர்மாவின் 'குட்டி இந்தியா' என்றும் அழைக்கப்படும் யாங்கூன் பகுதியில் அமைந்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust