Highest-Paying Jobs in India Twitter
இந்தியா

இந்தியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் வேலைகள் பற்றி தெரியுமா?

Priyadharshini R

படித்த படிப்பிற்காகவும் இல்லாமல் அதிகமான சம்பளத்திற்காகவும் இல்லாமல் பலர் ஏதோ ஒரு வேலையை செய்து வருகின்றனர். படித்த அல்லது அனுபவத்திற்கு ஏற்ற வேலை கிடைப்பது கடினம், அப்படி இல்லையென்றால் வேலைக்கு ஏற்ற சம்பளம் கிடைப்பதும் கடினம். இதனாலேயே பலர் வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்க நினைக்கிறார்கள்.

ஆனால் இந்தியாவிலேயே அதிக ஊதியம் வழங்கும் பல வேலைகள் உள்ளன. அப்படி அதிக சம்பளம் கிடைக்கும் வேலைகள் எவை என இங்கே தெரிந்துகொள்ளலாம்.

AI

டேட்டா சயின்ட்டிஸ்ட்

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் தரவு விஞ்ஞானிகளுக்கு அதிக தேவை உள்ளது. சராசரியாக ஆண்டுக்கு 10 -15 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள்.

செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்கள்

AI தொடர்ந்து பல்வேறு தொழில்களில் புரட்சியை ஏற்படுத்தி வருவதால், AI பொறியாளர்களுக்கு அதிக தேவை உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 10 -12 லட்சம் ரூபாய் வரை இவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. இது வெறும் சராசரி அளவு தான். இதே துறையில் சிலர் 20 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுகின்றனர்.

முதலீட்டு வங்கியாளர்கள்

கடினமான அல்லது சிக்கலான பண பரிவர்த்தனைகளைக் கையாளும் பொறுப்பு, முதலீட்டு வங்கியாளர்களுக்கு தான் உள்ளது. இவர்களது சராசரி சம்பளம் ஆண்டுக்கு ரூ.8 முதல் ரூ.15 லட்சம் என உள்ளது.

அறுவை சிகிச்சை நிபுணர்கள்

சுகாதாரத் துறையில், அறுவை சிகிச்சை நிபுணர்கள் குறிப்பிடத்தக்க நல்ல சம்பளத்தைப் பெறுகிறார்கள். சில நிபுணர்கள் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள்.

Chartered Accountant

படிக்கும் போது கடினமாக இருக்கும் படிப்பு என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம் . ஆனால் படித்த பின்பு நல்ல சம்பளம் வரும் என்றே படிக்கிறார்கள். ஆண்டுக்கு சராசரியாக 6 -10 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறுகின்றனர்.

இந்தத் தொழில்கள் அதிக வருவாய் ஈட்டும் வேலையாக இருந்தாலும் அவர்களுக்கு சிறப்புக் கல்வி, பயிற்சி தேவை என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்தியாவில் திறன் சார்ந்த நிபுணர்களுக்கான தேவை பல்வேறு துறைகளில் அதிகரித்து வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?