15 நிமிடம் படிக்க, 3 மணி நேரம் சண்டைபோட - இணையத்தில் வைரலாகும் 6 வயது சிறுவனின் டைம்டேபிள் twitter
இந்தியா

15 நிமிடம் படிக்க, 3 மணி நேரம் சண்டைபோட - இணையத்தில் வைரலாகும் 6 வயது சிறுவனின் டைம்டேபிள்

இங்கும் ஒரு 6 வயது குழந்தை டைம்டேபிள் போட்டு தன் நாளை கடக்கிறான். அந்த அட்டவணையில் ஒவ்வொரு வேலைக்குமான நேர ஒதுக்கீடு தான் இதில் ஹைலைட்!

Keerthanaa R

ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்ட ஒரு டைம் டேபிளின் புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த புகைப்படத்தில் அவர் தன் 6 வயது கசினுடைய தினசரி கால அட்டவணையை (டைம்டேபிளை) பகிர்ந்திருந்தார்.

அந்த சிறுவனின் டைம்டேபிள் தற்போது வைரலாகி வருகிறது.

நாம் ஸ்கூலில் படிக்கும் காலத்தில் தினமும் அன்றைக்கான டைம்டேபிள் கொடுக்கப்படும். முதல் பீரியட இங்கிலீஷ், அடுத்த பீரியட் கணக்கு, கணிதம் என்று.

சில பிள்ளைகள், வீட்டிற்கு சென்ற பிறகு, ஒரு அட்டவணை வைத்து அதற்கேற்றார்போல படிப்பார்கள். இந்த பழக்கம் பெரியவர்களுக்கும் இருக்கிறது. டைம்டேபிள் போட்டுட்டு வேலை செய்யறான் பா! என்று நாம் கிண்டலடிப்போம்

இங்கும் ஒரு 6 வயது குழந்தை டைம்டேபிள் போட்டு தன் நாளை கடக்கிறான். அந்த அட்டவணையில் ஒவ்வொரு வேலைக்குமான நேர ஒதுக்கீடு தான் இதில் ஹைலைட்!

அதில் காலை எழும் நேரத்தில் இருந்து, இரவு தூங்குவது வரையான செயல்களுக்கு நேரம் குறிக்கபட்டுள்ளது. எல்லோரையும் போல நம் கண்களும் படிக்கவும், விளையாடவும் எவ்வளவு நேரம் உள்ளது என்பதை தான் தேடுகிறது.

அப்படி பார்க்கும்போது படிக்க மதியம் 2.30 முதல் 2.45 வரை, 15 நிமிடங்கள் ஒதுக்கியுள்ளான். ஆனால் அது விஷயம் அல்ல

அதில் சண்டையிடும் நேரம் என்று ஒரு குறிப்பு உள்ளது. அதற்கு அவன், காலை 11.30 முதல் மதியம் 2.30 வரை என மூன்று மணி நேரத்தை குறிப்பிட்டிருக்கிறான். இது தான் அந்த அட்டவணையில் வேடிக்கையான விஷயமே

லைபா என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தன் சகோதரனின் (கசின்) அறிவாற்றலை மெச்சிய அவர், கேப்ஷனில், "என் 6 வயடு கசின் இந்த டைம்டேபிளை தயாரித்துள்ளான். படிப்பதற்கு வெறும் 15 நிமிடங்கள் தான். வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான் மோஹித்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்களும் மோஹித்தை பாராட்டி வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?