Travel Pexels
இந்தியா

ரிஷிகேஷ் முதல் கசோல் : ரூ.5000 செலவில் இந்தியாவில் சுற்றிப்பார்க்க 7 அட்டகாச இடங்கள்

அன்றாடத்தை பட்ஜெட்டுக்குள் கட்டுப்படுத்திட நினைக்கும் சூழலில் செலவுதான் எப்போதும் கண்முன் நிற்கும். ஆனால், 5,000 ரூபாய்க்குள் இந்தியாவில் சுற்றிப்பார்க்க சில இடங்கள் உள்ளன. நம்பமுடியவில்லையா ஆம் இவைதாம் அந்த இடங்கள்.

NewsSense Editorial Team

"எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு ஒரு 5 நாள் எங்கையாவது டிராவல் போகணும்" - இந்த மனநிலை பலருக்கும் வருவதுண்டு. ஆனால், மன நிம்மதிக்காகப் பயணம் போகலாம் என யோசிக்கும்போதே மன அழுத்தத்தைத் தருவது பயணத்துக்கான செலவு. அன்றாடத்தை பட்ஜெட்டுக்குள் கட்டுப்படுத்திட நினைக்கும் சூழலில் செலவுதான் எப்போதும் கண்முன் நிற்கும். ஆனால், 5,000 ரூபாய்க்குள் இந்தியாவில் சுற்றிப்பார்க்க சில இடங்கள் உள்ளன. நம்பமுடியவில்லையா ஆம் இவைதாம் அந்த இடங்கள்.

ரிஷிகேஷ், உத்தரகாண்ட்

ரிஷிகேஷ், உத்தரகாண்ட்

கங்கை நதியின் தாயகம் ரிஷிகேஷ். சாகச விரும்பிகள், ஓய்வை விரும்புபவர் என இரு தரப்பினருக்கும் ஏற்ற இடம். வெள்ளை வாட்டர் ராஃப்டிங்கிற்கு பெயர் பெற்ற இந்த இடம் டெல்லியிலிருந்து 225 கிமீ தொலைவில் உள்ளது. பட்ஜெட்டைப் பற்றி பெரிதாக யோசிக்காமல் இங்குச் செல்லலாம். இந்த இடத்திற்குத் தனியாருக்குச் சொந்தமான பேருந்துகள் அல்லது வோல்வோக்களில் செல்லலாம்; டிக்கெட்டுகளின் விலை ரூ.200 முதல் தொடங்குகிறது. மற்றும் ஒரு வழிக்குச் சென்று ரூ. 1400 வரை செலவாகலாம். மேலும், ஏராளமான தங்கும் வசதிகள் மற்றும் ஆசிரமங்கள் இங்குள்ளன. அங்கு நீங்கள் ஒரு நாளைக்கு ரூ.150 குறைந்த விலையில் ஒரு அறையைப் பெறலாம்.

கசோல், இமாச்சல் பிரதேசம்

கசோல், இமாச்சல் பிரதேசம்

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ரம்மியமான இடம். இதன் இயற்கையான அழகுக்காக புகழ் பெற்றது. உலகெங்கிலும் உள்ள பல மக்கள் இங்குள்ள ஹிப்பி பாணி உணவகங்கள் மற்றும் பார்களை அனுபவிக்க வருகிறார்கள். இங்குக் கோவாவிலிருப்பது போல உணர முடியும். அந்த அளவுக்கு வெளிநாட்டுப் பயணிகள் அதிகம் வரும் இடம். குறைந்த செலவில் இந்த இடத்திற்கு நீங்கள் ஒரு அற்புதமான பயணத்தை அனுபவிக்க முடியும். இங்குச் செல்ல பேருந்து கட்டணம் ரூ.800-லிருந்து தொடங்குகிறது.

வாரணாசி, உத்திரபிரதேசம்

வாரணாசி பல ஆண்டுகளாக ஊர் சுற்றுபவர்கள் விரும்பும் ஓர் இடம். உணவு, தங்குமிடம், போக்குவரத்துச் செலவுகள் மிகவும் மலிவு என்பதால் இங்குப் பலரும் படையெடுக்கின்றனர். உங்கள் பயணத்தைப் புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டால், ஒரு நாளைக்கு 200 ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் தங்கும் வசதியைப் பெறலாம். வாரணாசி இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் நன்கு இணைக்கப்பட்ட ஒரு நகரம்.

கன்னியாகுமரி, தமிழ்நாடு

கன்னியாகுமரி, தமிழ்நாடு

திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 85 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. தென்னிந்தியாவில் பெரும்பாலான மக்கள் விரும்பும் இடம். பல ஓய்வுபெற்ற பயணிகள், அதிகாலை சூரிய உதயத்தைக் காணவும், இங்குள்ள விவேகானந்தர் பாறைக்குச் செல்லவும் வருவதுண்டு. திருவனந்தபுரத்திலிருந்து பஸ் டிக்கெட் ரூ.250. ஹோட்டல் அறைகளின் விலை ரூ. 800 ரிலிருந்து தொடங்குகிறது.

ஹம்பி, கர்நாடகா

ஹம்பி, கர்நாடகா

உலகம் முடிவதிலுமிருந்து வரும் பயணிகளுக்கு ஹம்பி மிகவும் பிடித்தமானதாக இடமாகியிருக்கிறது. இடிபாடுகளின் நகரமாகப் புகழ் பெற்ற ஹம்பி `இந்தியாவின் பெட்ரா' என்றும் அழைக்கப்படுகிறது. துங்கபத்ரா ஆற்றின் இருபுறமும் அமைந்துள்ள இந்த இடம், தனக்கென ஒரு வசீகரத்தைக் கொண்டுள்ளது. எனவே, நீங்கள் ஒரு பரபரப்பான பட்ஜெட்டுக்கு ஏற்ற பயணத்தை மேற்கொள்ள ஆர்வமாக இருந்தால், நீங்கள் பெங்களூருவைச் சுற்றி எங்கிருந்தாலும் ஹம்பி உங்களுக்கு எற்ற சாய்ஸ்

மெக்லியோட் கஞ்ச்

மெக்லியோட் கஞ்ச்

தில்லியில் அல்லது அதைச் சுற்றி இருப்பவர்களுக்கும், வார இறுதியில் நகரத்தை விட்டு வெளியேற விரும்புபவர்களுக்கும் இந்த இடம் சிறந்த பட்ஜெட் ஹேங் அவுட் ஸ்பாட். முன்கூட்டியே திட்டமிட்டு, ஒரு நாளுக்கு 200 ரூபாய்க்கு குறைவான ஹோட்டல்களைப் பெறுங்கள்; நீங்கள் சுமார் 500 ரூபாய் செலவழித்தால், மெக்லியோட் கஞ்சில் நீங்கள் ஒரு நல்ல தங்குமிடத்தைப் பெறலாம்.

பின்சார், உத்தரகாண்ட்

பின்சார், உத்தரகாண்ட்

டெல்லியிலிருந்து சுமார் 9 மணிநேர பயண தூரத்தில் அமைந்துள்ள இடம் பின்சார். புகழ்பெற்ற பின்சார் வனவிலங்கு சரணாலயத்தின் தாயகம். இது 90- களின் பிற்பகுதியில் ஒரு முக்கியமான பறவை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. தில்லியிலிருந்து பின்சருக்கு அருகிலுள்ள ரயில் நிலையமான கத்கோடத்திற்கு செல்லலாம், செலவைக் குறைக்க, நீங்கள் உள்ளூர் பேருந்து அல்லது ஷேர் டாக்ஸியில் செல்லலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?