அதிரப்பள்ளி முதல் நோகலிகை வரை: சுற்றுலா பயணிகளை மயக்கும் 7 இந்திய நீர்வீழ்ச்சிகள்! Twitter
இந்தியா

அதிரப்பள்ளி முதல் நோகலிகை வரை: சுற்றுலா பயணிகளை மயக்கும் 7 இந்திய நீர்வீழ்ச்சிகள்!

Antony Ajay R

இந்தியா பலதரப்பட்ட நிலப்பரப்புகளுக்கு சொந்தமான பூமி. உலகில் இருக்கும் எந்த விதமான காடுகளையும், மலைகளையும், பாலைவனத்தையும் இந்தியாவில் பார்க்க முடியும்.

இங்கு மிக அழகான நாம் கொண்டாடி மகிழக்கூடிய பல நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன.

நீர் வீழ்ச்சிகள் பிரம்மாண்டமானவை. எந்த நீர்வீழ்ச்சியையும் பார்த்துவிட்டு குளித்து ஆட்டம் போடாமல் திரும்புவது இயலாத காரியம். அந்த அளவுக்கு அவை நம்மை ஈர்க்கும். 

அடர்ந்த காடு சூழ்ந்த நீர் வீழ்ச்சியில் பனியும் சூரிய வெளிச்சமும் உண்டாக்கிய வானவில்லையும் தெளிவான நீரில் தெரியும் கூழாங்கற்களையும் ரசித்தபடி குளிப்பதைத் தவிர சொர்க்கம் வேறென்ன இருக்க முடியும்?

இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் சிறந்த 7 நீர் வீழ்ச்சிகளைக் காணலாம்.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

கேரளாவில் இருக்கும் திரிசூரில் மாவட்டத்தில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி இருக்கிறது. இதனை இந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர்.

அடர்ந்த பசுமையான காடுகள் கூழ்ந்திருக்கும் இந்த நீர் வீழ்ச்சி ஓவியம் போல காட்சியளிக்கும். இதனால் இங்கு இயற்கை ஆர்வலர்களும் புகைப்பட கலைஞர்களும் குவிவது வழக்கம்.

துத்சாகர் நீர்வீழ்ச்சி, கோவா

கோவாவில் ஆளை மயக்கும் ஆயிரம் அதிசயங்கள் இருந்தாலும் மண்டோவி ஆற்றில் இருக்கும் துத்சாகர் அருவிக்கு தனிச் சிறப்பு உண்டு. 

கம்பீரமான இந்த அருவியில் 310 மீட்டர் உயரத்தில் இருந்து நீர் விழுவதனால் வெள்ளையாக நுரைத்துக் காணப்படும். இதன் விளைவாக இந்த அருவிக்கு பால் கடல் என்றும் சிறப்பு பெயருண்டு.

ஒரு த்ரில்லான ஜீப் சவாரி அல்லது ட்ரெயின் மூலம் காட்டுக்கு நடுவில் சென்று இந்த அருவியை அடையலாம்.

ஜோக் அருவி, கர்நாடகா

கர்நாடகாவில் உள்ல சிமோகா மாவட்டத்தில் ஜோக் அருவி இருக்கிறது. இரண்டாவது உயர்மான இடத்தில் இருக்கும் நீர்வீழ்சியாக கூறப்படுகிறது.

ஷராவதி ஆற்றில் இருந்து இந்த அருவி உருவாகிறது. இதிலிருந்து ராஜா, ராணி, ரோரர் மற்றும் ராக்கெட் என 4 நீர் வீழ்ச்சிகள் உருவாகின்றன. 

நோகலிகை நீர்வீழ்ச்சி

மேகாலாவில் உள்ள அதிக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கக் கூடிய நீர்வீழ்ச்சி இது. 340 மீட்டர் உயரமானது இந்த நீர்வீழ்ச்சி. பனிமூட்டம் சூழ்ந்த மலைகள் காடுகளுக்கு நடுவில் இது இருக்கிறது.

இந்த் நீர்வீழ்ச்சியைப் பார்க்கும் போது இது தொடர்பான புராணக்கதையையும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

துவாந்தர் அருவி, மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் இருக்கிறது இந்த அருவி. நர்மதா நதியின் குழந்தையான இந்த அருவியில் நேரம் செலவழிப்பது வாழ்நாள் அனுபவமாக இருக்கும்.

மூடுபனி சூழ்ந்த பள்ளத்தாக்க்கில் இந்த அருவிக்கு அருகில் படகு சவாரி செய்தால் அருகில் இருந்து இதன் கம்பீரத்தை அனுபவிக்கலாம், 

ஹொக்கானேக்கல் அருவி, தமிழ்நாடு

காவேரி அருவியில் அமைந்துள்ள ஹொக்கானேக்கல் அருவிக்கு அறிமுகமே தேவையில்லை.

இந்த தண்ணீர் மருத்துவ குண்டங்கள் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள பாறை வடிவமைப்பு புகழ்பெற்றது.

மூன்று அடுக்குகளாக விழும் இந்த அருவி இயற்கையான நீச்சல் குளங்களை உருவாக்கியிருக்கிறது.

இங்கு படகு சவாரி மற்றும் பரிசல் சவாரி செய்யலாம்.

சூச்சிப்பாரா அருவி, கேரளா

சென்டினல் ராக் நீர்வீழ்ச்சிகள் என்றும் இவை அழைக்கப்படுகின்றன. கேரளாவின் வயநாட்டில் இந்த அருவி அமைந்துள்ளது.

அடர்ந்த காடுகளுக்கும் தேயிலைத் தோட்டங்களுக்கும் நடுவில் இது அமைந்துள்ளது.

இந்த அருவிக்கு ட்ரெக்கிங் செய்து செல்லும் போது வர்ணிக்க இயலாத மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?