போகிற போக்கை பார்த்தால் இந்தியாவில் தக்காளியின் விலை தங்கத்தை விட உச்சத்தை தொட்டுவிடும் போல இருக்கிறது.
இதனால் நம் அன்றாட சமையலில் தக்காளியை பார்த்து பார்த்து பயன்படுத்துகிறோம். அநேகமாக தக்காளியில்லாமல் இந்த டிஷ் எல்லாம் செய்யலாம்னு யூடியூபில் விரைவில் ரெசிப்பிகல் குவியும்.
தக்காளி விலை உயர்ந்த பிறகு தான் அதன் வரலாறை ஆராய்ந்தோம்.
சரி இந்த தக்காளி எப்படியும் நமக்கு தினசரி தேவையாக தானே இருக்கிறது? வாங்கிய ஓரிரு நாளில் கெட்டுப்போகும் பொருளான இதனை இப்போது விலை உயர்வுக்கு பிறகு பொத்தி பொத்தி வைக்கிறோம்.
தக்காளியின் Shelf Life-ஐ அதிகரிக்க சில வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்
நன்கு பழுத்திருக்கும் தக்காளிய வாங்காமல் கொஞ்சம் காய்வெட்டாக இருக்கும் தக்காளிகளை வாங்கலாம். இது பழுக்க சமயம் எடுக்கும், அதனால் நீண்ட நாட்களுக்கு தக்காளி நிலைத்திருக்கும்.
தக்காளி காயைவைத்தும் சமைக்கலாம்!
தக்காளியின் காம்பு கீழே படும்படி, அதனை தலைகீழாக வைத்தால் தக்காளிகள் பழுக்க நேரம் எடுக்கும்.
இதனால் வாங்கி வரும் தக்காளிகளை தலைகீழாக ஃப்ரிட்ஜில் வையுங்கள்
பழுத்த தக்காளிகளை ரூம் டெம்பரேச்சரில் சேகரித்து வைக்கலாம். வெப்பநிலைகள் அடிக்கடி மாறுவதால் எளிதில் இவை அழுகலாம். அறையின் வெப்பநிலை சமமாக இருந்தால் ஒரு வாரம் வரை கூட தக்காளிகள் கெடாமல் இருக்கும்
முன்பே சொன்னது போல தக்காளிகள் எளிதில் கெடக்கூடிய ஒன்று. பல சமயத்தில் ஒரு தக்காளி அழுகும் நிலையில் இருந்தால், அருகில் இருக்கும் பழங்களும் அழுக தொடங்கும். இதனால் தக்காளிகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.
விக்கிற விலைக்கு தக்காளிய அழுக விட முடியுமா?
தக்காளிகளை ஃப்ரிட்ஜில் வைக்காமல் ஃப்ரீசரில் வைக்கலாம். இது பழத்தினை உரைத்துவிடும். அதனால் வழக்கத்தை விட அதிக நாட்களுக்கு பழம் நிலைத்திருக்கும்.
தக்காளிகள் மட்டுமல்ல எந்த காய்கறியும் ஃப்ரீஸ் செய்து வைத்தால் நீண்ட நாட்களுக்கு வைத்திருக்கலாம்.
தக்காளிகளை அறைத்து அதனை பியூரேவாக செய்து ஸ்டோர் செய்து வைக்கலாம்.
வெயிலில் வைத்தோ அல்லது ஓவனில் வைத்தோ தக்காளிகளை வாடவைத்து பயன்படுத்தலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust