தக்காளிக்கும் காமத்துக்கும் என்ன தொடர்பு? இதயத்தை பாதுகாக்கும் தக்காளி பற்றி 10 உண்மைகள்!

தக்காளி இல்லாமல் சமைப்பது நம்மால் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்றாக இருக்க, இந்த தக்காளி நம் நாட்டு செடியே கிடையாது என்றால் நம்புவீர்களா? தக்காளி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
தக்காளிக்கும் காமத்துக்கும் என்ன தொடர்பு? இந்த பழம் கேன்சரை குணப்படுத்துமா?
தக்காளிக்கும் காமத்துக்கும் என்ன தொடர்பு? இந்த பழம் கேன்சரை குணப்படுத்துமா?Tomato - Canva
Published on

தக்காளி உலகம் முழுவதுமே பயன்படுத்தப்படும் காய்கறியாகும். வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், ஃபோலேட் முதலிய சத்துகள் நிறைந்திருப்பதனால் தக்காளி எல்லாருடைய உணவுப் பழக்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

தக்காளியின் சுவைப் பற்றி சொல்லவா வேண்டும்? நம் உணவுப் பழக்கத்தில் ரசம் வைப்பது முதல் பிரியாணி செய்வது வரை எல்லாத்திலும் தக்காளியை சேர்த்துக்கொள்ளத் தொடங்கிவிட்டோம்.

தக்காளி இல்லாமல் சமைப்பது நம்மால் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்றாக இருக்க, இந்த தக்காளி நம் நாட்டு செடியே கிடையாது என்றால் நம்புவீர்களா?

ஆம், தக்காளியின் பூர்வீகம் தென் அமெரிக்கா. தென்னமெரிக்க பழங்குடிகளைப் பொருத்தவரையில் தக்காளிக்கும் காமத்தும் ஒரு தொடர்பு இருந்தது. தக்காளியைப் பற்றி நம்மை வியக்க வைக்கக் கூடிய உண்மைகளைப் பார்க்கலாம்...

தக்காளியின் நிறம் என்ன தெரியுமா?

இது என்ன அர்த்தமே இல்லாத கேள்வி என நீங்கள் நினைக்கலாம். ஆனால் தக்காளி சிகப்பு நிறத்தில் மட்டுமில்லை. மஞ்சள், இளஞ்சிவப்பு, ஊதா, கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலும் கூட தக்காளி இருக்கிறது.

தென்னமெரிக்காவில் இருந்து முதன்முறையாக ஐரோப்பாவுக்கு வந்த தக்காளி மஞ்சள் நிறத்தில் மின்னியது. இதனை தங்க ஆப்பிள் எனக் குறிக்கும் விதமாக Pomi d'oro என இத்தாலி மக்கள் பெயர் வைத்தனர்.

தக்காளி வகைகள்!

நாட்டுத் தக்காளி, பெங்களூரு தக்காளி என நமக்குத் தெரிந்த வகைகளைத் தவிர உலகில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தக்காளி வகைகள் உள்ளன. அவற்றில் 3000 வகைகள் மட்டுமே பாரம்பரியமாக பயிரிடப்பட்டு வருகின்றன.

நாம் நாட்டுத் தக்காளி என சொல்லக் கூடிய வகை கூட இரண்டு தக்காளி வகைகள் கலப்பில் உருவானது தானாம்!

தக்காளி ஒரு காய்கறியா? பழமா?

தக்காளியின் பயன்பாடு எல்லாமே ஒரு காய்கறியினுடையதாக இருந்தாலும், அது அறிவியல் ரீதியில் ஒரு பழமே. இது ஒரு மிகப் பெரிய குழப்பமாக அமெரிக்காவில் வெடித்தது.

அமெரிக்காவில் பழங்களுக்கு வரி விலக்கு கொடுக்கப்பட்ட போது தக்காளிக்கும் கொடுக்கப்பட வேண்டும் என வணிகர்கள் சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடுத்தனர். தக்காளிக்கு வரி விலக்கு கொடுத்தால் அரசாங்கத்துக்கு நஷ்டம் என்பதனால் அரசாங்க வக்கீல் தக்காளி ஒரு காய்கறி என வாதாடினார்.

இறுதியில் சுப்ரீம் கோர்ட், "தக்காளி அடிப்படையில் பழவகையை சேர்ந்தது என்றாலும், அதனை ஃப்ரூட் சேலட்டில் பயன்படுத்துவதில்லை. ஒரு காய்கறியாகத் தான் பயன்படுத்துகிறோம் என்பதால் தக்காளி ஒரு காய் தான்" எனத் தீர்ப்பழித்தது.

விண்வெளிக்கு சென்ற தக்காளி

தென் அமெரிக்காவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய தக்காளி, நம் பூமியைத் தாண்டி விண்வெளிக்கும் சென்றுள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்த விண்வெளி ஆய்வாளர்கள் விண்வெளி விதைகளிலும், செடி வளர்ச்சியிலும் எப்படிப்பட்டத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை சோதிக்க 6 லட்சம் தக்காளி விதைகளை விண்வெளிக்கு அனுப்பியுள்ளனர்.

தக்காளிக்கும் காமத்துக்கும் என்ன தொடர்பு?

எப்படி தக்காளிக்கு தங்க ஆப்பிள் எனப் பெயர் வந்ததோ அது போல பிரான்சில் தக்காளி காமத்தைத் தூண்டுகிறது என ஆரம்பக் காலத்தில் நம்பப்பட்டதால் அதனை "லவ் ஆப்பிள்" எனப் பெயரிட்டு அழைத்தனர்.

தென் அமெரிக்க பழங்குடி மக்கள் தக்காளியை காமத்துடன் தொடர்புபடுத்தியதாக கூறப்படுகிறது. தக்காளியில் இருக்கும் லைக்கோபீன் போன்ற சத்துகள் விந்து உற்பத்திக்கு உதவுகின்றன.

கருவுறுதலுக்கு தேவையான சத்துகளும் தக்காளியில் இருக்கின்றதாம்.

சீனா தான் டாப்!

தக்காளி உற்பத்தியில் சீனாதான் முதலிடம் வகிக்கிறது. உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் தக்காளியில் 4ல் ஒரு பங்கு தக்காளி சீனாவில் உற்பத்தியாகிறது.

இரண்டாவது மற்றும் 3வது இடங்களில் அமெரிக்காவும், இந்தியாவும் இருக்கின்றன. அமெரிக்காவில் தக்காளி சாஸ் இல்லாத வீடுகளே இருக்காது எனலாம்.

தக்காளிக்கும் காமத்துக்கும் என்ன தொடர்பு? இந்த பழம் கேன்சரை குணப்படுத்துமா?
பாதாம் தோலோடு சாப்பிட்டால் என்ன ஆகும்? | Nalam 360

கின்னஸ் படைத்த தக்காளி

ஒரு மரத்தில் இருந்து ஒரே வருடத்தில் அதிக தக்காளிகள் சாகுபடி என்ற கின்னஸ் சாதனை மே 2005 - 2006 ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டது.

ஒரு தக்காளிச்செடி 32,000 தக்காளிகள் அந்த ஆண்டில் காய்த்தது. அந்த மரம் கிட்டத்தட்ட அரை டன் எடைக்கொண்டது.

தக்காளிக்கும் காமத்துக்கும் என்ன தொடர்பு? இந்த பழம் கேன்சரை குணப்படுத்துமா?
இரும்புச் சத்து குறைபாடா? இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க

லைக்கோபீன்

லைக்கோபீன் என்ற ஆண்டிஆக்ஸைடுகள் தக்காளியில் அதிகமாக இருக்கின்றன. ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி சீராக செயல்பட இந்த லைக்கோபீன் மிகவும் அவசியம்.

இந்த லைக்கோபீன் தான் தக்காளி பப்பாளி போன்ற பழங்களுக்கு அவற்றின் செந்திறத்தை தருகின்றன. இந்த லைக்கோபீன் சிலவகை கேன்சர்களைக் கூட தடுக்கும் திறன் வாய்ந்தது எனக் கூறுகின்றனர்.

தக்காளிக்கும் காமத்துக்கும் என்ன தொடர்பு? இந்த பழம் கேன்சரை குணப்படுத்துமா?
கர்ப்பம் தரிக்க இந்தியாவுக்கு வரும் ஜெர்மனி பெண்கள்: தூய ஆரியர்கள் இருப்பது உண்மையா?

இதயத்துக்கு நல்லதா?

தக்காளி இயற்கையாகவே அழற்சி தடுப்பு பொருள். இது இதயம் மற்றும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

தக்காளியில் இருக்கும் பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

தக்காளிக்கும் காமத்துக்கும் என்ன தொடர்பு? இந்த பழம் கேன்சரை குணப்படுத்துமா?
தக்காளி இந்தியாவிற்குள் எப்படி வந்தது தெரியுமா? சமையல் ராணி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

தக்காளி பெயர்வந்தது எப்படி?

தக்காளியின் ஆங்கில வார்த்தையான டொமேட்டோ என்பது டொமேட் என்ற ஸ்பானிய வார்த்தையில் இருந்து பெறப்பட்டது. தென்னமெரிக்க பழங்குடிகளான ஆஸ்டிக் மக்களின் Nahuatl மொழியில் Tomatl என்ற வார்த்தையில் இருந்து டொமேட்டோ உருவாகியிருக்கிறது.

இந்தியாவில் மணத்தக்காளி சொடக்கு தக்காளி வகைகள் ஏற்கெனவே இருந்ததனால் 1600களில் போர்ச்சுகீசியர்கள் அறிமுகப்படுத்திய தக்காளியை சீமைத் தக்காளி என்றே அழைத்தனர்.

தக்காளிக்கும் காமத்துக்கும் என்ன தொடர்பு? இந்த பழம் கேன்சரை குணப்படுத்துமா?
Biryani : 'ஈரான் டூ இந்தியா' பிரியாணி கடந்து வந்த பாதை - ஓர் ஆச்சரிய வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com