சோமேட்டோவில் சைவ உணவுகளை டெலிவரி செய்வதற்கென பச்சை நிற சீருடை மற்றும் பையை அறிமுகப்படுத்தியதற்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் விளக்கம் அளித்திருக்கிறார்.
சமீபத்தில் சோமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம் தங்களது சைவ உணவு பிரிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ‘Pure Veg Mode’ என்ற சேவையை தொடங்கியுள்ளது.
அதாவது உணவை தயாரிக்கும் உணவகம் மட்டுமல்லாது அதனை டெலிவரி செய்யும் ஊழியர்களும் சைவ உணவை மட்டுமே டெலிவரி செய்வார்கள் என அந்த நிறுவனம் தெரிவித்தது.
இது சைவ உணவு பிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், இது பாகுபாட்டினை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சோமேட்டோ நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் விளக்கம் அளித்துள்ளார். அதில் “சைவ உணவு உண்பவர்களுக்கான சிறப்பு வசதியை அகற்ற முடிவு செய்துள்ளோம்.
எங்களின் சிவப்பு நிற சீருடை டெலிவரி பார்ட்னர்கள் அசைவ உணவுடன் தவறாக தொடர்பு கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்கிறோம். இந்த வெளியீட்டின் எதிர்பாராத விளைவுகளை எங்களுக்குப் புரிய வைத்தீர்கள். உங்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்” என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust