நீர் விமானம் முதல் மணல் எரிமலைகள் வரை - அந்தமான் நிகோபார் தீவுகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் twitter
இந்தியா

நீர் விமானம் முதல் மணல் எரிமலைகள் வரை - அந்தமான் நிகோபார் தீவுகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

Keerthanaa R

இந்தியாவின் பிரபலாமன சுற்றுலா தலங்களில் ஒன்று இந்த அந்தமான் நிகோபார் தீவுகள். இங்கு சுமார் 571 தீவுகள் இருக்கின்றன.

இங்கு மனிதர்கள் வசிக்கக்கூடிய தீவுகள் மொத்தம் 37.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.

இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின்போது அந்தமான் நிகோபார் தீவுகள் முக்கிய பங்கு வகித்தன.

இந்த அந்தமான் நிகோபார் தீவுகள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் காணலாம்

மலாய் மொழிப் பெயர்

மலாய் மொழியில் ஹனுமானை அண்டுமான் என்று அழைக்கின்றனர். இதன் மூலம் வந்த பெயர் தான் இந்த அந்தமான். அதேபோல சோழர்கள் தீவை மா-நக்கவரம் என்று அழைத்தனர். இதுவே தற்போது நிகோபார் என்கிற பெயர் வரக் காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதிகம் பேசப்படும் மொழி

இந்த தீவில் அதிகம் பேசப்படும் மொழியாக பெங்காலி இருக்கிறது. அதன் பிறகு, இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளும் பேசப்படுகிறது. அந்தமான் கிரியோல் இந்தி அந்தமான் தீவுகளில் வர்த்தக மொழியாகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

உலகின் மிகப் பெரிய கடல் ஆமை

இந்த தீவுகளில் கடல் ஆமைகள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவான கடற்கரைகள் உள்ளன. ஹாக்ஸ்பில், பச்சை ஆமை மற்றும் உலகின் மிகப்பெரிய கடல் ஆமை, லெதர்பேக் ஆகியவற்றிற்கு இவை nesting beachகளாக செயல்படுகின்றன

செண்டினல் தீவுகள்

வடக்கு செண்டினல் தீவுகளில் வழும் செண்டினல் மக்கள், உலகில் இருந்து முற்றிலும் விடுபட்ட பழங்குடி இனமாகும்.

இவர்களின் எண்ணிக்கையே மொத்தம் 300 தான். இவர்களின் எல்லைக்குள் புதிய ஆட்கள் யாரேனும் வந்தாலும் கூட அம்புகள் பாய்ச்சி தாக்குகிறார்கள். சுமார் 60,000 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இங்கு வசித்து வருகின்றனர்

மீன் பிடிக்க தடை

இங்கு வணிக ரீதியிலான மின்பிடி சுமார் 4 தசாப்தங்களாக தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது இங்குள்ள நீரில் வாழும் மீன்கள் வயது மூப்பு காரணமாக இறந்துவிடுவதாக கூறப்படுகிறது.

இந்த நீரில், டால்பின்கள், திமிங்கலங்கள், கடல் ஆமைகள், செயில்ஃபிஷ் போன்றவற்றை பார்க்கலாம்

நிகோபார் பிரெட்ஃப்ரூட்

பண்டுனஸ் என்று அழைக்கப்படும் இந்த பழ வகையானது நிகோபார் தீவுகளின் ஆஸ்தான உணவு வகைகளில் ஒன்று. இதன் செடியும் வணிக ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பண்டுனஸின் கிளைகள் கட்டுமான பணிகளிலும், இதன் இலைகள் பாய் தைப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

பார்ப்பதற்கு கொஞ்சம் பலாப்பழம், சீதா பழத்தை ஒத்து இருக்கிறது பண்டுனஸ். இதன் கடுமையான தோல் பகுதியை, உடம்பு தேய்க்க பயன்படுத்துகின்றனர்

20 ரூபாய் நோட்டு

இந்திய 20 ரூபாய் நோட்டில் இருக்கும் காட்சியானது அந்தமான் தீவுகளில் இருக்கும் நார்த் பே தீவு மற்றும் ஹாரியெட் மலையினை குறிக்கின்றனது. ஹாரியெட் மலை, அந்தமான் நிகோபார் தீவுகளின் இரண்டாவது பெரிய மலையாகும்

மணல் எரிமலைகள்

அந்தமானின் பரடாங் தீவுகளில் அமைந்திருக்கிறது இந்த மணல் எரிமலைகள். மார்ச் 1983ல் முதன் முதலில் இந்த மலையில் மணல் வெடிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் உள்ளன

கடல் விமானம்

கடல் விமானமானது தரை, தண்ணீர் இரண்டிலும், புறப்பட்டு தரையிறங்கக் கூடியவை. அரசின் பவன் ஹான்ஸ் நிறுவனம் தான் ஜல் ஹான்ஸ் எனப்படும் இந்த சீ பிளேன்களை இந்தியாவில் அறிமுய்கப்படுத்தியது. 2013ல் அந்தமானில் தான் இது முதன் முதலில் லான்ச் செய்யப்பட்டது.

ஜல் ஹான்ஸ் என்பது எட்டு இருக்கைகள் கொண்ட செஸ்னா 208 ஏ ஆகும். ஒரு மணி நேரத்தில் 250 கிமீ வரை பயணிக்கக் கூடியது இந்த விமானம். மற்றும் தரையிலும் தரையிறங்க முடியும்.

ராஸ் தீவுகள்

1858 முதல் ஆங்கிலேயர்களின் அந்தமான் தலைநகராக இருந்தது இந்த ராஸ் தீவுகள். 1941ல் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு இவ்விடம் ஜப்பானியர்களின் போர் கைதிகளை அடைத்துவைக்கும் முகாமாக மாறியது.

தற்போது இந்திய கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ராஸ் தீவுகள் ஒரு பிரபலமான சுற்றுலா தலம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?