ஆந்திரா : மக்களுக்காக தன்னைத் தானே செருப்பால் அடித்துக்கொண்ட கவுன்சிலர் - என்ன நடந்தது? Twitter
இந்தியா

ஆந்திரா : மக்களுக்காக தன்னைத் தானே செருப்பால் அடித்துக்கொண்ட கவுன்சிலர் - என்ன நடந்தது?

Antony Ajay R

ஆந்திரபிரதேசம் மாநிலம் அனக்கப்பள்ளி மாவட்டம் நர்சிபட்டினம் நகராட்சியில் ஒரு கவுன்சிலர் தன்னை தானே செருப்பால் அடித்துக்கொண்டுள்ளார்.

நர்சிபட்டினம் வார்டு 20 கவுன்சிலர் எம்.ராமராஜு. திங்கள் அன்று நடந்த கவுன்சில் மீட்டிங்கில் இந்த விநோத செயலில் ஈடுபட்டுள்ளார்.

இவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ராமராஜு தனது தொகுதி மக்களுக்கு வாக்களித்தவற்றை நிறைவேற்ற முடியாததால் இப்படி செய்துள்ளார்.

ராமராஜு இரண்டரை ஆண்டுகளாக கவுன்சிலராக இருந்துள்ளார். இத்தனை நாட்கள் ஆனாலும் கவுன்சிலராக வடிகால், தண்ணீர் சப்ளை, மின்சாரம், சுகாதாரம் மற்றும் சாலை வசதிகள் போன்ற எதையும் மேம்படுத்தவில்லை எனக் கூறியுள்ளார்.

கவுன்சில் மீட்டிங்கில் தன்னால் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியவில்லை எனக் கூறி தன்னைத் தானே தண்டித்துக்கொண்டார் அந்த கவின்சிலர்.

நர்சிப்பட்டினத்தில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டி பிழைப்பு நடத்தும் கவுன்சிலர் ராமராஜு, பிரச்சனைகளை தீர்க்க அனைத்து வழிகளையும் பயன்படுத்த முயற்சித்ததாகவும் ஆனால் தோல்வியடைந்ததாகவும் கூறினார்.

ராமராஜுவின் இந்த நடவடிக்கை மாவட்ட நகராட்சி ஊழியர்களிடம் அதிருப்தியை சம்பாதித்தது. நகராட்சி அதிகாரிகள் கடந்த 3 ஆண்டுகளில் வார்டு 20க்கு எந்த நல்லதும் செய்யவில்லை என கவின்சிலர் குற்றம்சாட்டியுள்ளார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?