Anju Sharma IAS: 10,12ம் வகுப்பில் ஃபெயிலானவர் 22 வயதில் UPSC பாஸ் செய்தது எப்படி? Twitter
இந்தியா

Anju Sharma IAS: 10,12ம் வகுப்பில் ஃபெயிலானவர் 22 வயதில் UPSC பாஸ் செய்தது எப்படி?

Antony Ajay R

வெற்றி பெறுவதற்கான வழிகளைக் கற்றுத்தர தோல்வியை விட சிறந்த ஆசான் இல்லை எனக் கூறுவர்.

வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தோல்விகளைத் தாண்டி வந்திருந்தாலும் நம் பார்வை வெற்றியை நோக்கியதாக இருக்கும் போது வெல்வது நிச்சயம் எனக் கூறுகிறது அஞ்சு சர்மா ஐஏஎஸ்-ன் கதை.

அஞ்சு தன் முன்னால் இருந்த தடைகளை கடந்து 22 வயதில் தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றார். இவர் 10 மற்றும் 12 வகுப்பில் ஃபெயிலானவர் என்பது நாம் நம்பமுடியாத தகவல்.

10ம் வகுப்பில் வேதியியல் பாடத்திலும் 12ம் வகுப்பில் பொருளாதாரத்திலும் பொதுத் தேர்வுகளுக்கு முந்தைய தேர்வுகளில் தோல்வியடைந்திருக்கிறார் அஞ்சு.

ஆனால், இந்த பாடங்களைத் தவிர மற்றவற்றில் நல்ல மதிப்பெண்களை எடுத்துள்ளார் அஞ்சு. கல்லூரியில் B.Sc படித்துள்ளார். தொடர்ந்து MBA படித்தார்.



தனது தோல்விகளில் இருந்து தன்னிடம் உள்ள குறைகளைத் தெரிந்துகொண்டார் அஞ்சு.

அவர் மிக மிக தாமதமாக தேர்வுகளுக்கு படிக்கத் தொடங்குவது தான் தோல்விக்கு காராணம் என அறிந்துகொண்டு அதனைத் தவிர்த்துவந்தார். இந்த பழக்கத்தை மாற்றியதால் கல்லூரியில் அவரால் தங்க பதக்கம் வாங்க முடிந்தது.

இதையே அவர் யுபிஎஸ்சியிலும் செயல்படுத்தினார். தேர்வுக்கு மிக முன்னதாகவே அவர்து பாடத்திட்டத்தைப் படித்து முடித்தார்.
இறுதியில் அதிக மதிப்பெண் பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் இடம் பெற்றார்.

1991ம் ஆண்டு அஞ்சு ராஜ்கோட் மாநிலத்தில் மாவட்ட துணை ஆட்சியராக பணியைத் தொடங்கினார். இப்போது குஜராத் கல்வித்துறையில் முதன்மை செயலராக பணியாற்றுகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?