அரவிந்த் கெஜ்ரிவால், பகவத் மான் Twitter
இந்தியா

பஞ்சாப் : கெஜ்ரிவாலின் பொம்மையா முதல்வர் பகவத்மான்? - எதிர்க்கட்சிகள் விமர்சனம்

Antony Ajay R

பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் சிங் மான் இல்லாமல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னிச்சையாகப் பஞ்சாப் அதிகாரிகளைச் சந்தித்திருக்கும் நிகழ்வு பஞ்சாப் அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது.

பஞ்சாப் மாநில தேர்தல் சமீபத்தில் முடிந்து பகவத் மான் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பகவத் மான் தேர்ந்தெடுக்கப்பட்டது முதலே அவரைப் பற்றி பல விமர்சங்கள் எழுந்தது. அவற்றில் முக்கியமானது பகவத் மான் கெஜ்ரிவாலின் கையாளாக மட்டுமே செயல்படுவார் என்பது தான். அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலத் தலைமைச் செயலாளர் , மின்துறை செயலாளர் மற்றும் பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஎஸ்பிசிஎல்) தலைவர் ஆகியோருடன் சந்திப்பு நடத்தியதாகத் தகவல் வெளியானது.

காங்கிரஸ் விமர்சனம் :

பஞ்சாப் காங்கிரஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங், "டெல்லி மக்களின் கைப்பாவையாக இருக்குமா பஞ்சாப். இந்த கூட்டம் எந்த நிலையில், எந்த பிரச்சினை அடிப்படையில் நடத்தப்பட்டது என்பதை முதல்வர் பக்வந்த் சிங் விளக்க வேண்டும். பக்வந்த் சிங் மான் பெயருக்கு மட்டுமே முதல்வரா" என்ற ரீதியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆம் ஆத்மி விளக்கம் :

பஞ்சாப் கேபினட் அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர். அவர், "எங்கள் கட்சித் தலைவரை அரசு நிர்வாகிகள் சந்தித்ததில் எந்தத் தவறும் இல்லை. கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதிகாரிகள் கூட்டத்தை நடத்த முடியும். இதில் கண்டிக்கவோ, தவறாகவோ எதுவும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள். Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.


Pls send your Valuable feedback to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?