அசாமில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில், பள்ளிக் கட்டணமாக பிளாஸ்டிக் பாட்டில்களை பெறுகின்றனர்.
இது குறித்த வீடியோ ஒன்றை நாகாலாந்து அமைச்சர் தேம்ஜென் இம்னா அலாங் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இயற்கைக்கு எமனாக இருக்கும் விஷயங்களில் ஒன்று நெகிழிகள். நமது வாழ்க்கை முறையில், நெகிழிகளின் பயன்பாடு சற்றே அதிகரித்துள்ளது.
இந்த பிளாஸ்டிக்குகள் குப்பைகளாக மாறும்போது, ஆண்டாண்டு காலத்துக்கும் அழியாமல் அப்படியே இருக்கின்றன. இவை மக்காது. இதனால், நிலம், காற்று ஆகியவை மாசடைவதுடன், சுற்றுச்சூழலையும் இது பாதிக்கிறது.
இதனை மறுசுழற்சி செய்து பல்வேறு பொருட்கள், ஏன் வீடுகள் கூட வடிவமைக்கின்றனர்.
ஆனாலும், பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை குறைப்பது அவசியம். இதற்காக அரசாங்கமும் பல்வேறு முன்னெடுப்புகளை செய்துவருகிறது.
ஆனால் இதன் விழிப்புணர்வு, நம் வீட்டில் இருந்தே தொடங்கவேண்டியது அவசியமாகிறது
பள்ளிகளிலும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். அப்படி அசாமில் உள்ள ஒரு பள்ளிக்கூடம், சற்றே வித்தியாசமான முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது.
அசாம் மாநிலத்தில் அக்ஷர் ஃபவுண்டேஷன் என்ற பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது
இந்த அக்ஷர் அறக்கட்டளை பள்ளியானது, தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு கல்வியை வழங்கும் பள்ளியாகும்.
இந்த பள்ளியில் கட்டணம் என்ன தெரியுமா?
பிளாஸ்டிக் பாட்டில்கள்!
ஒவ்வொரு வாரமும் இங்கு படிக்கும் மாணவர்கள் 25 பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வந்து பள்ளியில் கொடுக்கவேண்டும்.
அப்படி கொடுக்கும் குழந்தைகளுக்கு இங்கு கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது.
பர்மித மற்றும் மாசின் என்ற இருவர் இணைந்து தான் இந்த வித்தியாசமான பள்ளிக்கூடத்தை தொடங்கினர். அவர்கள் வசிக்கும் பகுதியில், அதிகபடியான குப்பைகள் குவிவதையும், அதே சமயம் குழந்தைகள் கல்வி இன்றி தவிப்பதையும் கவனித்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த இரு பிரச்னைகளுக்கும் தீர்வாக ஒரு பள்ளிக்கூடத்தை அசாமில் உருவாக்கினர். இங்கு கல்வி பயில வரும் குழந்தைகள் 25 பிளாஸ்டிக் பாட்டிகளை சேகரித்து பள்ளிக்கு வழங்கவேண்டும்.
அப்படி சேகரிக்கப்படும் பிளாஸ்டிக்குகள், மறு சுழற்சி செய்யப்பட்டு, சாலைகள் அமைக்க, டாய்லெட்டுகள், செங்கற்கள் போன்றவற்றை தயாரிக்கப்படுகிறது.
இந்த பள்ளியில், மாணவர்கள் தான் ஆசிரியர்களும். வயதில் மூத்த மாணவர்கள் அவர்களின் இளையோர்களுக்கு கல்வி கற்பிக்கின்றனர்.
வழக்கமான பாடங்கள் அல்லாது, மொழிகள், பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி, தோட்டக்கலை, தச்சு வேலை ஆகிய திறன்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது.
இந்த பள்ளியில் drop out rate 0%-வாக உள்ளது. அதாவது, கல்வி பயிலாமல், பாதியில் நிற்கும் குழந்தைகளின் சதவிகிதம்.
இந்த பள்ளி அந்த ஊர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust