screenshot of the conversation between the teacher and the student twitter
இந்தியா

"மாணவர்களிடம் அன்பாக நடந்துகொள்ளுங்கள்!" - ஆசிரியருக்கு பெண் அனுப்பிய மெசேஜ் வைரல்

2019ல் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவியை, அவரது டியூஷன் ஆசிரியர், "நீ பொது தேர்வில் தேரமாட்டாய். பள்ளிப் படிப்பை முடிக்கமாட்டாய்" என்று கூறியுள்ளார். ஆனால் அந்த மாணவி, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு இரண்டிலும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

Keerthanaa R

ஆசிரியர்களும் மாணவர்களும் நண்பர்களைப் போல பழகும் சூழல் தற்போது தான் உருவாகத் தொடங்கியுள்ளது. முன்பெல்லாம் நம் நடத்தையிலிருந்து, நாம் உடுத்தும் உடை வரை, எல்லா விதத்திலும் கண்டிப்புகள் இருக்கும். முக்கியமாக நாம் நன்கு படிக்காத மாணவர்களை நடத்தும் விதமே வேறு தான். நீ தேரமாட்டாய், உனக்கு எதுவுமே ஒழுங்காக செய்ய வராது என்ற வசை தான் அதிகம் கேட்டிருப்போம்.

அந்த நேரத்தில், அவர்களுக்கு தெரிந்த விதத்தில் நம் நலனுக்காக இந்த கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார்கள் என்றாலும், அதன் வடு இன்றும் மனதில் இருக்கத்தான் செய்கிறது. நாம் இந்த மாதிரி வார்த்தைகளை கேட்டு, புண்பட்டு, அது பின்னர் எப்போதும் மனதிலிருக்கும் காயமாக மாறியும் இருக்கிறது சிலருக்கு. வெகு சிலரே இதை கடந்து வந்து சாதித்துள்ளனர். ஆனால், இந்த காலத்து மாணவர்கள் அப்படியல்ல.

2019ல் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவியை, அவரது டியூஷன் ஆசிரியர், "நீ பொது தேர்வில் தேரமாட்டாய். பள்ளிப் படிப்பை முடிக்கமாட்டாய்" என்று கூறியுள்ளார். ஆனால் அந்த மாணவி, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு இரண்டிலும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

மேலும் தான் சேரவேண்டும் என எண்ணியிருந்த கல்லூரியில் தனக்கு விருப்பமாக இருந்த படிப்பை தேர்ந்தெடுத்து படித்து வருகிறார். இந்த விஷயத்தை தன்னை மட்டம் தட்டிய ஆசிரியரை தொடர்புகொண்டு தெரியப்படுத்தினார். ஆனால், அதில் ஒரு வார்த்தைக்கூட அந்த ஆசியருக்கு நன்றி சொல்வதாக இல்லை. மாறாக அவரது செயல் எவ்வளவு தவறு என்பதை தான் அந்த மாணவி அவருக்கு எடுத்துரைத்திருந்தார்.

"இது நன்றி சொல்லும் குறுஞ்செய்தி அல்ல. நீங்கள் என்னை குறைத்து மதிப்பிட்ட போதும், என்னால் முடியும் என்று சாதித்ததை உங்களுக்கு தெரிவிக்கவே இந்த செய்தியை அனுப்பியுள்ளேன். அடுத்த முறையேனும் மாணவர்களிடம் பணிவாக, அன்போடு நடந்துகொள்ளுங்கள். முக்கியமாக உங்களிடம் உதவி நாடி வரும் மாணவர்களிடம்" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு விஷயத்தை சரியாக செய்யவரவில்லை என்பதற்காக நம்மால் எதையுமே செய்ய முடியாது என்று மட்டம் தட்டுவது தவறு என்பதையும் அதிகமாக நாம் கூறிவருவதே இதற்கு காரணம்.

இந்த உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட்டை அந்த பெண் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் அந்த ஆசிரியர், இன்று நீ சாதித்ததற்கு நான் அன்று அவ்வாறு பேசியது தான் காரணம் என்பது போல பதிலளித்திருந்தார்.

இந்த பதில் தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம், அவரது தவற்றை எடுத்து சொல்லியும், அவர் அதனை உணராமல் அடிப்படையில் தான் நல்லவர் தான் எனச் சொல்வது போல இருக்கிறது அவரது பதில்.

ஒரு சிலர் அந்த பெண்ணின் செயலை பாராட்டினாலும், சிலரோ ஆசிரியர்களை அவமதிக்கக் கூடாது என்று கமென்ட்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?