பெங்களூரு: Uber, Ola, Rapido சேவைகளை நிறுத்த உத்தரவு- அரசின் முடிவுக்கு காரணம் என்ன? Twitter
இந்தியா

பெங்களூரு: Uber, Ola, Rapido சேவைகளை நிறுத்த உத்தரவு- அரசின் முடிவுக்கு காரணம் என்ன?

இந்தியாவின் ஐடி தலைநகரமாக அறியப்படும் பெங்களூரு நிறுவனம் இந்த செயலிகள் மூலம் ஆட்டோ புக் செய்யும் சேவையைத் தடை செய்வதாக கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Antony Ajay R

Uber, Ola, Rapido போன்ற போக்குவரத்து சேவைகள் பெருநகரங்களில் அதிக அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இவையில்லாமல் வாழ முடியாத நிலைக்கு நகரவாசிகள் தள்ளப்பட்டுவிட்டனர் என்றே கூறலாம்.

ஆனால் இந்தியாவின் ஐடி தலைநகரமாக அறியப்படும் பெங்களூரு நிறுவனம் இந்த செயலிகள் மூலம் ஆட்டோ புக் செய்யும் சேவையைத் தடை செய்வதாக கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகார்களை அடுத்து கர்நாடக போக்குவரத்து துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ நிறுவனங்களை நடத்திவரும் ஏ.என்.ஐ டெக்னாலஜீஸுக்கு மூன்று நாட்களில் ஆட்டோ சேவைகளை நிறுத்தவும் இணக்க அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக இந்த நிறுவனங்கள் மீது புகார் எழுந்துள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு 15 ரூபாய் எனில் 2 கிலோ மீட்டருக்கு 30 ரூபாய் என்பது அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணம்.

ஆனால் இந்த நிறுவனங்களில் புக் செய்யும் போது, இரண்டு கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவுக்கு கூட 100 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நோட்டீஸில் ஆட்டோ சேவையை நிறுத்துவதுடன் டாக்ஸி உள்ளிட்ட சேவைகளுக்கு அரசு நிர்ணயித்ததை விட அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட கூடாது எனவும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக 292க்கும் அதிகபடியான புகார்கள் வந்துள்ளன. பயணிகள் தங்களது அவலத்தை அரசுக்குத் தெரிவிக்க, பல ஈமெயில்களை அரசுக்கும் முதல்வருக்கும் அனுப்பியுள்ளனர்.

இவற்றைத் தொடர்ந்து அதிகாரிகள் களத்தில் இறங்கி குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திய பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மாற்றாக ARDU என்ற பெயரில் பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர் சங்கம் தங்களது சொந்த செயலியை வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நந்தன் நிலேகனி நம்ம யாத்ரா என்ற பெயரில் புதிய செயலியை வரும் நவம்பர் 1ம் தேதி தொடங்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?