gobi manchurian Twitter
இந்தியா

கோபி மஞ்சூரியனுக்காக மூதாட்டி கொலை: மகள், பேரன் கைது - 6 ஆண்டுகளுக்கு பின் வெளியான மர்மம்!

Priyadharshini R

கோபி மஞ்சூரியனுக்காக நடந்ததாக கூறப்படும் 6 வருட கொலை வழக்கை பெங்களூரு போலீசார் தற்போது தீர்த்து வைத்துள்ளனர்.மகாராஷ்டிராவிற்கு தப்பி ஓடிய குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, ஆகஸ்ட் 2016 இல் 70 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டார்.

தற்போது அந்த மூதாட்டியின் கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அவரது மகள் மற்றும் பேரனை போலீஸார் கைது செய்தனர்.

Death

அந்த அறிக்கையின்படி, பெங்களூரு கெங்கேரி சாட்டிலைட் டவுன் பகுதியில் வசிக்கும் 27 வயதான சஞ்சய் வாசுதேவ் ராவ், தனது பாட்டி சாந்த குமாரியிடம் கோபி மஞ்சூரியன் கேட்டு தகராறு செய்துள்ளார்.

சாந்தகுமாரிக்கு அந்த உணவு பிடிக்காததால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய், தனது பாட்டியைக் கொன்று, அவரது தாயார் சசிகலாவின் உதவியுடன் வீட்டுக்குள் புதைத்துள்ளார்.

சஞ்சய் தனது நண்பரான நந்தீஷிடமும் உடலை அடக்கம் செய்ய உதவி கேட்டுள்ளார்.

அவர்கள் அனைவரும் மூதாட்டின் உடலை வீட்டில் உள்ள ஒரு அலமாரியில் சிமெண்டால் மூடி புதைத்ததாக கூறப்படுகிறது. சஞ்சய் மற்றும் அவரது தாயார் சசிகலா ஆகியோர் பிப்ரவரி 2017 இல் வீட்டை காலி செய்தனர்.

மே 2017 இல், வீட்டைப் புதுப்பிக்கும் போது, ​​வீட்டின் உரிமையாளர் அலமாரியில் அழுகிய சடலம் இருப்பதைக் கண்டு போலிசாருக்குத் தெரிவித்தார்.

உடலை அடையாளம் கண்ட போலீசார், விசாரணை நடத்தியதில் நந்தீஷை கைது செய்தனர். மேலும் குற்றச் சாட்டுகளை அழித்ததாக மற்ற 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையில், தாய் மற்றும் மகன் இருவரும் மகாராஷ்டிராவின் கோலாபூருக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

சஞ்சய் அங்கு ஒரு உணவகத்தில் பணியாளராக பணிபுரிந்தார். அவரது தாயார் கோலாப்பூரில் பணிப்பெண்ணாக பணிபுரிந்தார். மும்பை போலீசார் உதவியுடன் இருவரையும் கைது செய்தனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?