Death Twitter
இந்தியா

பெங்களூரில் தேசிய கொடி ஏற்ற முயன்ற இஞ்சினியர் மரணம் - என்ன நடந்தது

Antony Ajay R

பெங்களூரில் வசித்து வந்த சாஃப்ட்வர் இஞ்னியர் ஒருவர் தேசியக் கொடி ஏற்ற முயன்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று 75வது சுதந்திரத்தை நாடுமுழுவதும் கொண்டாடிவருகிறோம். இந்த நாளை மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

பெங்களூரைச் சேர்ந்த 33 வயது இளைஞர் விஷ்வாஸ் குமார். இவர் பெங்களூரில் உள்ள ஹென்னூர் பகுதியில் வசித்து வருகிறார்.

இரண்டு மாடிகள் உள்ள குடியிறுப்பின் கீழ்த் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் விஷ்வாஸ். சுதந்திர தினத்தை முன்னிட்டு வீட்டில் கொடி ஏற்றுவதற்காக வீட்டின் இரண்டாவது தளத்துக்கு ஏறிய அவர் அங்கிருந்து தவறுதலாக கீழே விழுந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தில் செய்தி வெளியாகியிருக்கிறது.

குடும்பத்தினர் விஷ்வாஸை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவருக்கு பல காயங்கள் ஏற்பட்டிருந்ததால் இறந்துவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

விஷ்வாஸ் ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். ஞாயிறு அன்று இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

இதேப் போல மகாராஷ்டிராவைச் சேர்ந்த 65 வயது முதியவர் தேசியக்கொடி ஏற்ற முயன்று வீட்டின் மாடியில் இருந்து விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?