delivery guy Twitter
இந்தியா

Swiggy : முகம் நிறைந்த புன்னகையுடன் உணவு டெலிவரி செய்யும் மாற்றுதிறனாளி - ஓர் அடடே சம்பவம்

Priyadharshini R

உணவு டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி நபரின் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூரில் வசிக்கும் ரோஹித் குமார் சிங் என்பவர் LinkedIn தளத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.அதில், "ஞாயிற்றுக்கிழமை விடுமுறையினை அனுபவிக்க நான் எனக்கு பிடித்த உணவினை ஆர்டர் செய்தேன் அப்போது டெலிவரி செய்யும் நபர் சற்று நேரத்தில் வருவதாகக் கூறினார்.

ஆனால் பல நிமிடங்கள் கடந்தும் டெலிவரி செய்யும் நபர் வராததால், டெலிவரி செய்யும் நபருக்கு அழைத்துள்ளார் ரோஹித்

Swiggy

அப்போது அவர் கணிவான குரலில் 5 நிமிடத்தில் வருகிறேன் எனக் கூறினார். "ஆனால் அவர் 10 நிமிடங்கள் தாமதமாக வந்து எனது அறையின் காலிங் பெல்லை அடித்தார்.

கடும் பசியினால் பொறுமை இழந்திருந்த நான் கோபமாக கதவை திறக்க சென்றேன். அப்போது அந்த டெலிவரி செய்யும் நபரின் தோற்றம் என்னை கலங்கவைத்துவிட்டது."

டெலிவரி செய்ய வந்த நபர் ஒரு மாற்றுத்திறனாளி, இருகைகளிலும் ஊன்றுகோலைப் பிடித்தபடி புன்னகையுடன் நின்றார். அவருக்கு 40 வயது இருக்கும்.

Swiggy App

நான் அவரை பற்றி விசாரித்தேன் அவர் பெயர் கிருஷ்ணப்பா ரத்தோட், ஓட்டலில் வேலை செய்துவந்த அவர் கொரோனா தொற்று காரணமாக தனது வேலையை இழந்துள்ளார்.

தற்போது சிவிக்கி ஆன்லைன் டெலிவரி பாயாக வேலை செய்வதாக கூறினார். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தனது பொருளாதார நிலை காரணமாக அவர்களுக்கு சிறந்த கல்வியினை கொடுக்க முடியவில்லை. இருந்தபோதிலும் அதிகாலை முதல் நாள் முழுவதும் சளைக்காமல் உழைப்பதாகக் கூறினார்.

"நாங்கள் 2 அல்லது 3 நிமிடங்கள் உரையாடியிருந்தபோது, திடீரென அவர் எனக்கு அடுத்த டெலிவரிக்கு நேரம் வந்து விட்டது எனக் கூறி என்னைக் கடந்து சென்றார்" என ரோஹித் தன் LinkedIn பதிவில் தெரிவித்தொருந்தார்

இந்த அனுபவத்தை பற்றி ரோஹித் பகிர்ந்த பின்னர், தன்னைப் பல கேள்விகள் சூழ்ந்து கொண்டது என்றும் யாராவது அவருக்கு நன்கொடை அளித்து உதவ விரும்பினால், தயவுசெய்து என்னை DM செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.

ரோஹித் குமார் சிங்கின் இந்த பதிவு இணையவாசிகளின் மனதை கவர டெலிவரி பாயான கிருஷ்ணப்பா ரத்தோடிற்கு பலரும் உதவ முன்வந்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?