ஒடிசா மாநிலத்தில் இரண்டு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால், நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது.
விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 32 பேர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ரயிலில் பயணிக்க தமிழ்நாட்டை சேர்ந்த 127 முன்பதிவு செய்து இருந்தனர், மேலும் பயணிகள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
--> ஜூலை 7, 2011 அன்று, உத்திரபிரதேசத்தில் எட்டா மாவட்டம் அருகே சாப்ரா-மதுரா எக்ஸ்பிரஸ் பேருந்து மீது மோதியது. 69 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து அதிகாலை 1.55 மணியளவில் நடந்தது. ரயில் அதிவேகமாக இயங்கியதால் பேருந்து சுமார் அரை கிலோமீட்டர் வரை இழுத்துச் சென்றது.
--> இந்திய இரயில்வே வரலாற்றில் 2012ஆம் ஆண்டில் மட்டும் 14 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. தடம் புரண்டது மற்றும் நேருக்கு நேர் மோதிய விபத்து என இரண்டும் இதில் அடங்கும்.
--> ஜூலை 30, 2012 அன்று, டெல்லி-சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூர் அருகே தீப்பிடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
--> மே 26, 2014 அன்று, உத்தரப் பிரதேசத்தின் சந்த் கபீர் நகர் பகுதியில், கோரக்பூர் நோக்கிச் சென்ற கோரக்தாம் எக்ஸ்பிரஸ், கலிலாபாத் நிலையத்திற்கு அருகாமையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியதில் 25 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
--> மார்ச் 20, 2015 அன்று டேராடூனில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டிருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலியில் உள்ள பச்ரவான் ரயில் நிலையம் அருகே ரயிலின் என்ஜின் மற்றும் இரண்டு அடுத்தடுத்த பெட்டிகள் தடம் புரண்டதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150 பேர் காயமடைந்தனர்.
--> நவம்பர் 20, 2016 அன்று இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் கான்பூரின் புக்ராயன் அருகே தடம் புரண்டதில் 150 பயணிகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
--> ஆகஸ்ட் 23, 2017 அன்று உத்தரபிரதேச மாநிலம் அவுரியா அருகே டெல்லி செல்லும் கைஃபியத் எக்ஸ்பிரஸின் ஒன்பது ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் 70 பேர் காயமடைந்தனர்.
--> ஜனவரி 13, 2022 அன்று, மேற்கு வங்காளத்தின் அலிபுர்துவாரில் பிகானேர்-குவஹாத்தி எக்ஸ்பிரஸின் 12 பெட்டிகள் தடம் புரண்டதில் 9 பேர் உயிரிழந்தனர். 36 பேர் காயமடைந்தனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust