நரேந்திர மோடி: பிரதமரால் உத்திரபிரதேசத்தில் நின்ற திருமணம்! கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட் ட்விட்டர்
இந்தியா

நரேந்திர மோடி: பிரதமரால் உத்திரபிரதேசத்தில் நின்ற திருமணம்! கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்

Keerthanaa R

மணமகனுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் தெரியாததால், திருமணத்தை நிறுத்தியுள்ளார் மணப்பெண்.

திருமணங்கள் பல வினொதமான காரணங்களுக்காக நின்றதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். மாப்பிள்ளை கருப்பாக இருக்கிறார், மணமேடையில் வைத்து முத்தம் கொடுத்தார், லெஹங்கா வாங்கிக் கொடுக்கவில்லை என்று.

இந்த திருமணமும் சற்றே வித்தியாசமான காரணத்திற்காக நின்றுள்ளது. உத்தரபிரதேசம் காசிபூரில் அமைந்திருக்கிறது நாசிபூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த சிவ சங்கர் ராம் என்பவருக்கும், கரண்டா என்ற இடத்தை சேர்ந்த ரஞ்சனா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணத்திற்கு பெண் வீட்டிற்கு மேள தாளத்துடன் உற்சாகமாக வந்து சேர்ந்தனர் மாப்பிள்ளை வீட்டார். சடங்குகள் ஒரு புறம் நடக்க, மணப்பெண் மணமகனிடம் சில கேள்விகளை கேட்டார்.

அப்போது இந்தியாவின் பிரதமர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. பதில் தெரியாமல் திணறினார் சிவ சங்கர் ராம். இதனால் திருமணத்தை நிறுத்தினார் மணப்பெண் ரஞ்சனா.

அடிப்படையாக தெரிந்திருக்க வேண்டிய விவரங்கள் கூட தெரியாமல் இருக்கும் ஒருவரை என்னால் மணக்க இயலாது என்று கூறி இத்திருமணத்தை நிறுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த மணமகனின் தந்தை, மகனை அவமானப்படுத்தியதற்காக காவல் துறையில் புகார் அளிப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் இரு வீட்டாரும் கலதாலோசித்து, புகார் அளிக்காமல் தடுத்தனர்.

மேலும் மணமகளிடம் பேசி சிவ சங்கரின் தம்பியை அவருக்கு திருமணம் வைத்துள்ளனர். அவரும் ரஞ்சனா கேட்ட கேள்விக்கு பதிலளித்த பின்னரே திருமணம் செய்துகொண்டுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?