Britannia  Twitter
இந்தியா

Britannia : ரூ.295ல் தொடங்கி 1 டிரில்லியன் எட்டியது எப்படி - பிரிட்டானியாவின் விறுவிறு கதை

பிரிட்டானியாவின் பிஸ்கட்களின் பிற பிராண்ட் பெயர்களில் 50-50, நியூட்ரிச்சாய்ஸ், குட் டே, பியூர் மேஜிக் மற்றும் மில்க் பிகிஸ், போர்பன், நைஸ் டைம் மற்றும் லிட்டில் ஹார்ட்ஸ் ஆகியவை அடங்கும்.

Priyadharshini R

90s கிட்ஸ்களுக்கு பிரியமான பிஸ்கட்களில் ஒன்று தான் இந்த பிரிட்டானியா.

1892 ஆம் ஆண்டு, ஒரு சிறிய வீட்டின் அறையில் தொடங்கப்பட்ட நிறுவனம் தற்போது 130 ஆண்டுகள் கடந்து நிலைத்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய FMCG நிறுவனங்களில் ஒன்றாகவும் பிரிட்டானியா கருதப்படுகிறது.

நவம்பர் 2022 இல், ஜூன்-செப்டம்பர் காலாண்டில் வலுவான வருவாய் வளர்ச்சியின் பின்னணியில் பிரிட்டானியாவின் பங்குகள் உயர்ந்தது,

இதன் விளைவாக பிரிட்டானியா ரூ. 1 டிரில்லியன் சந்தை மதிப்பை தாண்டியுள்ளது.

வெறும் ரூ.295-ல் ஆரம்பித்து ரூ.1 டிரில்லியன் நிறுவனமாக மாறியது எப்படி?

பிரிட்டானியா 1892 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தொழிலதிபர்கள் குழுவினால் 295 ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டது.

ஆரம்பத்தில், கொல்கத்தாவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் பிஸ்கட் தயாரிக்கப்பட்டது. பின்னர், இந்த நிறுவனம் குப்தா சகோதரர்களால், "V.S. பிரதர்ஸ்" என்ற பெயரில் இயங்கியது.

பின்னர் 1918 இல், கொல்கத்தாவைச் சேர்ந்த சி.எச்.ஹோம்ஸ் என்ற ஆங்கிலேய தொழிலதிபர் பங்குதாரராக எடுத்துக் கொள்ளப்பட்டு, தி பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனி லிமிடெட் (பிபிசிஓ) என்ற பெயரில் மீண்டும் தொடங்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் பங்கு

இரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) பிஸ்கட்டுகளுக்கு அதிக தேவை இருந்ததால், பிரிட்டானியாவின் விற்பனை உயர்ந்தது. ஏனெனில் நிறுவனம் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு பிஸ்கட்களை வழங்கியது.

பின்னர், நிறுவனத்தின் பெயர் 1979 இல் தற்போதைய "பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்" என மாற்றப்பட்டது.

1982 ஆம் ஆண்டில், அமெரிக்க நிறுவனமான Nabisco Brands, Inc. பீக் ஃப்ரீன்ஸின் தாய் நிறுவனத்தை கையகப்படுத்தியது.

பிராண்டை உருவாக்குதல்

1979 க்குப் பிறகு, பிஸ்கட் மற்றும் ரொட்டியின் விற்பனை பிரிட்டானியாவை வளர்ச்சி பாதைக்கு எடுத்து சென்றது.

இருப்பினும், பிராண்டின் புகழ் நாட்டின் முக்கிய நகரங்களில் மட்டுமே இருந்தது.

அன்றாட உணவுப் பொருட்களுக்கான நிறுவனமாக மாற விரும்பினால், தங்கள் பிராண்ட் பெயரை விரிவுபடுத்த வேண்டும் என்று நிறுவனம் முடிவு செய்தது.

அதுவே 1997 இல் பிரிட்டானியாவின் பால் பொருட்கள் உற்பத்தியைத் தொடங்க வழிவகுத்தது.

அதனுடன், நாடு முழுவதும் பல உற்பத்தி ஆலைகளை தொடங்க முடிந்தது. அதே ஆண்டில், அவர்கள் டைகர் பிஸ்கட் மற்றும் ஜிம் ஜாம்ஸ் போன்ற தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினர்.

அவை இப்போதும் பிரபலமாக உள்ளன. அவற்றின் மலிவான விலை, சுவை மற்றும் தரம் ஆகியவை நீண்ட காலத்திற்குப் பிறகும் பிரபலமாக இருக்க உதவுகின்றன.

பிரிட்டானியாவின் பிஸ்கட்களின் பிற பிராண்ட் பெயர்களில் 50-50, நியூட்ரிச்சாய்ஸ், குட் டே, பியூர் மேஜிக் மற்றும் மில்க் பிகிஸ், போர்பன், நைஸ் டைம் மற்றும் லிட்டில் ஹார்ட்ஸ் ஆகியவை அடங்கும்.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்

ஜூன்-செப்டம்பர் காலாண்டில், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபத்தில் 28.47% உயர்ந்து ரூ.490.58 கோடியாக உள்ளது. பிரிட்டானியாவின் மொத்த வருவாய் 21.40% அதிகரித்து ரூ.4,379.61 கோடியாக உள்ளது.

PTI அறிக்கையின்படி, இது பிரிட்டானியாவின் அதிகபட்ச காலாண்டு வருவாய் ஆகும். செப்டம்பர் காலாண்டில் FMCG நிறுவனத்திற்கான மொத்த செலவுகள் ரூ.3,773.71 கோடியாக இருந்தது.

தற்போது, ​​பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜ்நீத் கோஹ்லியும், நிர்வாக துணைத் தலைவராக வருண் பெர்ரியும் தலைமை வகிக்கின்றனர்.

1 டிரில்லியன் மதிப்பை எட்டியது எப்படி?

நவம்பர் 2022 காலாண்டு முடிவுகளின் பின்னணியில் பங்கு விலையில் ஏற்றம் கண்டதன் மூலம் பிரிட்டானியாவின் பங்கு 10% உயர்ந்தது.

இந்த உயர்வு பிரிட்டானியா ரூ. 1 டிரில்லியன் சந்தை மூலதனத்தை அடைய உதவியது. தற்போது, ​​பிரிட்டானியாவின் சந்தை மதிப்பு ரூ. 1.06 டிரில்லியன் ஆகும், மேலும் அதன் பங்குகள் இந்த ஆண்டில் இன்றுவரை 22% உயர்ந்துள்ளன.

பிரிட்டானியாவுடன் ஒப்பிடுகையில், பார்லே 110.46 மில்லியன் சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது, மேலும் அதன் பங்குகள் இந்த ஆண்டு இன்றுவரை 11% குறைந்துள்ளன. மறுபுறம், நெஸ்லே இந்தியாவின் சந்தை மதிப்பு ரூ. 1.95 டிரில்லியன் ஆகும், மேலும் அதன் பங்குகள் இன்றுவரை 3% உயர்ந்துள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?