இந்திய பட்ஜெட் 2023 Newssense
இந்தியா

இந்திய பட்ஜெட் 2023 : மத்திய அரசுக்கு பணம் எப்படி வருகிறது? எங்கே செலவழிக்கப்படுகிறது?

45,03,097 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பட்ஜெட்டில் எத்தனை சதவீத பணம் எங்கிருந்து வருகிறது, வரும் வருவாய் எதில் எல்லாம் செலவழிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பதை இங்கு சுருக்கமாக பார்ப்போம்.

NewsSense Editorial Team

2023 - 24 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1ஆம் தேதி) இந்திய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

45,03,097 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பட்ஜெட்டில் எத்தனை சதவீத பணம் எங்கிருந்து வருகிறது, வரும் வருவாய் எதில் எல்லாம் செலவழிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பதை இங்கு சுருக்கமாக பார்ப்போம்.

வருவாய் எங்கிருந்து வருகிறது?

அடுத்த நிதி ஆண்டில் கார்ப்பரேஷன் டேக்ஸ் என்று அழைக்கப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிகள் மூலம் இந்திய அரசுக்கு 15 சதவீதம் மட்டுமே வருவாய் வரும். அதே போல வருமான வரியின் மூலம் மற்றொரு 15 சதவீத வருவாய் வரவிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து சுங்கவரி மூலம் 4 சதவீத வருமானமும், மத்திய கலால் வரிகள் மூலம் 7 சதவீத வருமானமும் வரவிருக்கின்றன.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி எஸ் டி) மற்றும் அது சார்ந்த வரிகள் மூலம் இந்திய அரசுக்கு 17 சதவீதம் வரி வருவாய் வரவிருக்கின்றன.

இதை எல்லாம் விட சோகமான விஷயம் என்னவென்றால், இந்திய அரசு போட்டிருக்கும் பட்ஜெட்டில் 34 சதவீத பணம் கடன்கள் மற்றும் அது சார்ந்த விஷயங்களில் இருந்து திரட்டப்பட இருக்கின்றன.

எங்கே செலவழிக்கப்படுகிறது?

பல்வேறு ஆதாரங்களில் இருந்து வரும் வருவாயில் பெரும் பகுதி மத்திய அரசு திட்டங்களுக்கு (Central Sector Schemes) 17 சதவீதம் செலவழிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறைக்கு 8 சதவீதமும், மானியங்களாக 7 சதவீதமும், மாநில அரசாங்கங்களுக்கான வரி வருவாய் பகிர்மானங்களின் கீழ் 18 சதவீதமும், பென்ஷன் திட்டங்களுக்கு 4 சதவீதமும், மத்திய அரசு ஸ்பான்சர் செய்யும் திட்டங்களுக்கு (Centrally Sponsored Schemes) 9 சதவீதமும் செலவழிக்கப்படுகின்றன.

இதிலும் நம்மை எச்சரிக்கும் அல்லது நமக்கு வருத்தம் ஏற்படுத்தும் விஷயம் என்னவென்றால் இந்திய அரசின் பட்ஜெட்டில் போட்டிருக்கும் மொத்தத் தொகையில் 20 சதவீத தொகை வட்டி செலுத்த மட்டுமே பயன்படுத்தவிருக்கிறார்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?