மாடு கட்டிப்புடி தினம் பசுக்களை கட்டிப்பிடிக்க அரசு சொல்வது ஏன் - விரிவான பின்னணி
இந்தியா

பிப்ரவரி 14 : பசுக்களை கட்டிப்பிடிக்க அரசு சொல்வது ஏன்? - விரிவான பின்னணி

மேலும் அந்த அறிக்கையில், "மேற்கத்திய கலாச்சாரம் நம் சமூகத்தில் வேதகால மரபுகள் அழிவுக்கு வழிவகுக்கிறது" என்றும் அதனால் நமக்கு அதிக நன்மைகளைத் தரக் கூடிய பசுக்கள் மீது அன்பை வெளிப்படுத்துவது மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

Antony Ajay R

மத்திய கால்நடை மற்றும் மீன்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விலங்குகள் நலவாரியம் செயல்பட்டு வருகிறது.

பிப்ரவரி 14ம் தேதியை பசுக்கள் அரவணைப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் என்று விலங்குகள் நல வாரியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய சமூகத்தில் பொருளாதார ரீதியாக பசுக்கள் முக்கிய இடத்தைப் பெருவதனால் அவற்றின் மீதான அன்பை வெளிப்படுத்த இந்த தினத்தைக் கொண்டாட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

"தாய்க்கு பிறகு நமக்கு ஊட்டச்சத்து அளிப்பதாக பசு இருப்பதனால், அதனை காமதேனு, கோமாதா என்ற பெயர்களால் அழைக்கிறோம்." என்று அந்த அறிக்கை பசுக்களின் சிறப்பை குறிப்பிட்டது.

மேலும் அந்த அறிக்கையில், "மேற்கத்திய கலாச்சாரம் நம் சமூகத்தில் வேதகால மரபுகள் அழிவுக்கு வழிவகுக்கிறது" என்றும் அதனால் நமக்கு அதிக நன்மைகளைத் தரக் கூடிய பசுக்கள் மீது அன்பை வெளிப்படுத்துவது மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

நேர்மறை ஆற்றலுடன் பிப்ரவரி 14ஐ மாடுகளை அரவணைத்துக்கொண்டாட வேண்டும் என்றும் அந்த அரசு அறிக்கை அறிவுறுத்துகிறது.

இந்த அறிக்கையில் "இந்திய கலாச்சாரம்" என்ற வார்த்தையும் மாடுகளை கட்டிப்பிடிக்க பிப்ரவரி 14ம் தேதியை தேர்ந்தெடுத்ததும் பேசு பொருளாகியிருக்கிறது.

பிப்ரவரி 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அன்று காதலர்கள் சந்தித்து தங்களது காதலைப் பகிர்ந்துகொள்வர்.

koe knuffelen

ஏற்கெனவே இந்துத்துவ மற்றும் கலாச்சார அமைப்புகள் பிப்ரவரி 14ம் தேதி "காதலர் தினம் கலாச்சார சீர்கேடு", காதலர்களை துன்புறுத்துவது நடைபெற்றுவரும் சூழலில் அரசின் மேற்கத்திய கலாச்சாரத்தை தடுக்கும் நாளாக இந்த நாளைத் தேர்ந்தெடுத்தது நாட்டின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பசுவைக் கட்டிப்பிடிப்பது மேற்கத்திய கலாச்சாரத்தை நிராகரிப்பது என்று மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது. ஆனால், நெதர்லாந்தில் ஏற்கெனவே  “koe knuffelen” என்ற பசுக்களை கட்டிப்பிடிக்கும் வழக்கம் இருக்கிறது. இது அமெரிக்கா வரை பரவி இப்போதும் வழக்கத்தில் இருக்கிறது.

பசுவைக் கட்டிப்பிடிப்பது விலங்குகளுடன் இருக்கும் பிணைப்பை அதிகரிப்பதனால் அது மன நலத்தில் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்தி நம்மை ரிலாக்ஸாக உணரவைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?