காரில் பாதுகாப்பின்றி பயணத்த  குழந்தைகள்
காரில் பாதுகாப்பின்றி பயணத்த குழந்தைகள் twitter
இந்தியா

காரில் பாதுகாப்பின்றி பயணித்த குழந்தைகள்- வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய பெற்றோர் | Video

Keerthanaa R

காரின் பூட்டில் குழந்தைகளை உட்கார வைத்து கார் ஓட்டி சென்ற நபரை இணையவாசிகள் சாடி வருகின்றனர்.

தினமும் நம் கவனத்தை ஈர்க்கும் பல வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வந்த வண்ணம் தான் இருக்கிறது. இவை வைரலாவதற்கு இரண்டு காரணிகள் இருக்கும். ஒன்று அது பார்ப்பவர்கள் மனதை மகிழ வைக்கும், மற்றொன்று எதிர்மறை கருத்துக்களை பெற்றுக்கொள்ளும். 

அந்த இரண்டாம் வகையில் அடங்கும் வீடியோ ஒன்று தான் தற்போது பலரையும் கருத்துக்களை கூற வைத்துள்ளது.

ஹைதராபாத்தில் காரின் பூட்டில் மூன்று குழந்தைகள் உட்கார்ந்துகொண்டிருக்க, போக்குவரத்து நிறைந்த சாலையில் அந்த கார் சென்றுகொண்டிருக்கிறது. இதனை அந்த காரை பின்தொடர்ந்து சென்றவர்கள் வீடியோ பதிவு செய்து டிவிட்டரில் பகிர்ந்திருந்தனர். 

மூன்று குழந்தைகளும் வசதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துகொண்டு பயணத்தை ரசித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், பார்ப்பவர்கள் மனதை பதைபதைக்க வைக்கிறது இந்த காட்சி. எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் குழந்தைகள் பயணிப்பது, அவர்களது உயிருக்கே ஆபத்தாக மாறும் என பெற்றோரை கடிந்து வருகின்றனர். 

"இந்த பெற்றோர் எவ்வளவு பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள்?" என்ற கேள்வியுடன் நடவடிக்கை எடுக்கக் கோரி ஹைதராபாத் காவல் துறையை டேக் செய்து டிவிட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த மற்றொரு பயனர், அந்த பெற்றோரை உடனடியாக கைது செய்யுமாறு கேட்டிருக்கிறார். மேலும், குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது இவர்களது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யுமாறும் சிலர் கூறி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?