Hen Twitter
இந்தியா

6 மணி நேரத்தில் 24 முட்டைகள் இட்ட கோழி - அதிர்ச்சியில் உரிமையாளர்!

Priyadharshini R

கேரளாவில் 6 மணி நேரத்தில் ஒரு கோழி 24 முட்டைகளை இட்டுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் கோழிப்பண்ணைகள் அதிகம் அமைக்கப்படும் என்பது நாம் அறிந்த ஒன்று. ஆலப்புழாவை அடுத்த புன்னம்புறாவை சேர்ந்த பிஜூ என்பவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். தனது பண்ணையில் சுமார் 25 கோழிகளுக்கு மேல் வளர்த்து வருகிறார்.

திடீரென நேற்று காலையில் இவர் பண்ணையில் உள்ள ஒரு கோழி வித்தியாசமாக நடந்து கொண்டதைக் கவனித்தார்.

பின்னர் அதன் செய்கையில் மாற்றம் இருப்பதை அறிந்த பிஜூ, காலில் அடிபட்டு இருக்கலாம் என எண்ணி கோழியைப் பார்வையிட்டார். அப்போது அந்த கோழி நான் தோண்டப்பட்ட மண்ணுக்குள் முட்டைகளை இடத் தொடங்கியது.

காலை 8.30 மணி முதல் முட்டையிடத் தொடங்கிய கோழி சிறிது நேர இடைவெளிகளில் மதியம் 12.30 மணி வரை சுமார் ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்ட சம்பவம் பிஜூவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Hen farm

இந்த தகவலைக் கால்நடை மருத்துவ பல்கலைக் கழக அதிகாரிகளுக்கு பிஜூ தெரிவித்தார். இதனால் பண்ணைக்கு ஆய்விற்கு வந்த கோழி மற்றும் வாத்து பராமரிப்புத் துறை உதவி பேராசிரியர் 24 முட்டைகள் இட்ட கோழியை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறும்போது, இது அரிதிலும் அரிதான சம்பவம் எனவும், கோழிக்கு ஹார்மோன் சமநிலையின்மை காரணமாகத் தொடர்ந்து முட்டை போட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?