மணமேடையில் வைத்து மணமகனுக்கு லிப் லாக் கொடுத்த மணப்பெண்!  Twitter
இந்தியா

மணமேடையில் வைத்து மணமகனுக்கு லிப் லாக் கொடுத்த மணப்பெண்! நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?

இது அன்பின் உச்சக்கட்ட வெளிப்பாடாக இருந்தாலும், இன்றும், கணவன் மனைவிகளோ, காதலர்களோ வெளிப்படையாக முத்தத்தை பகிர சற்று தயங்குவது இயல்பே.

Keerthanaa R

தாலி கட்டிய பின்னர் மணமகள் மணமேடையிலேயே வைத்து தன் கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நம் பெற்றோர், சகோதரர்கள், பாட்டி, தாத்தாக்கள், காதலர்கள் என அனைவரிடத்திலும் நாம் முத்தத்தை பகிர்ந்திருப்போம்.

இது அன்பின் உச்சக்கட்ட வெளிப்பாடாக இருந்தாலும், இன்றும், கணவன் மனைவிகளோ, காதலர்களோ வெளிப்படையாக முத்தத்தை பகிர சற்று தயங்குவது இயல்பே.

Wedding

தனிபட்ட விஷயம் என்று வரையறுக்கப்படும் முத்தமும், தற்போது PDA எனப்படும் "Public Display of Affection"னில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இளைய தலைமுறையினர், இதுபோன்ற பல ஸ்டீரியோடைப்களை உடைத்து வருகின்றனர்.

அந்த வகையில் மணமேடையில் குடும்பத்தினர், உறவினர் புடை சூழ மணமகள் தன் கணவருக்கு முத்தமிடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மணமகன் மணமகளுக்கு தாலி கட்டிக்கொண்டிருக்கிறார், அந்த சமயத்தில் மணமகள் அவருக்கு முத்தமிடுகிறார். சற்றும் எதிர்பாராத விதமாக மனைவி முத்தமிட்டதால் மணமகன் முதலில் அதிர்ச்சியடைந்து, பின்னர் சிரித்து சமாளித்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதிலிருந்து, இணையவாசிகள் கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதை மேற்கத்திய கலாச்சாரம் என்றும், நம் நாட்டில் இது போன்ற பழக்கம் இல்லை எனவும் சிலர் கருத்துகளை தெரிவித்தனர்.

மேலும், குடும்பத்தினர் முன்பு இவ்வாறாக நடந்துகொள்வது, அவர்களை சங்கடத்திற்கு உள்ளாக்கும் எனவும் சிலர் தெரிவித்தனர். இது பார்ப்பதற்கு ரொமாண்ட்டிக் ஆகவோ, நகைச்சுவையாகவோ இல்லை என கமெண்ட் செய்தனர்.

ஆனால், இன்னொரு தரப்பினர், இதை கொண்டாடியதோடு, பார்ப்பதற்கும் க்யூட்டாக இருந்தது எனவும் தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?