உலகம் முழுவதும் காதலர் தினமாகக் கொண்டாடப்படும் பிப்ரவரி 14ஆம் தேதியை ”பசு அணைப்பு” தினமாகக் கொண்டாட வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் நேற்று கோரிக்கை விடுத்திருந்தது.
இந்திய விலங்குகள் நல வாரியம் அனுப்பிய சுற்றறிக்கையில்,
மேற்கத்திய பண்பாடுகளால் நம் வேத கால பழக்கவழக்கங்கள் அழியும் நிலையில் உள்ளதாகவும், பசுவை அரவணைப்பதன் மூலம் பெருமகிழ்ச்சி அடைய முடியும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
"தாய்க்கு பிறகு நமக்கு ஊட்டச்சத்து அளிப்பதாக பசு இருப்பதனால், அதனை காமதேனு, கோமாதா என்ற பெயர்களால் அழைக்கிறோம்." என்று அந்த அறிக்கை பசுக்களின் சிறப்பை குறிப்பிட்டது.
ஒரு புறம் வட இந்திய மாநிலங்களில் மாட்டின் பெயரால் அரசியல் சர்ச்சைகளைக் கிளப்பி வருகின்றனர். மற்றொரு புறம் மாட்டுகறி உண்பவர்களுக்கு எதிரான தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிப்ரவரி 14 அன்று பசு அணைப்பு தினம் கொண்டாட வேண்டும் என்றும் விலங்குகள் நல வாரியம் கோரியுள்ளது.
தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் வைத்து வாழ்க்கையை நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றும் வகையில் பசுப் பிரியர்கள் அனைவரும் இதனை கொண்டாட வேண்டும் என்றும் விலங்குகள் நல வாரியம் கோரியுள்ளது.
இதற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மீம்ஸ்களை பகிர்ந்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
வைரல் மீம்ஸ்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust