பாலியல் மோசடி Twitter
இந்தியா

ஆன்லைன் பாலியல் மோசடி : 14,000 பேர் மீட்பு - சைபராபாத் காவலர்கள் அதிரடி!

இணையத்தளங்களில் விளம்பரம் செய்வது, கால் சென்டர்கள் மூலம் அணுகுவது மற்றும் வாட்ஸ் அப் குரூப்கள் வழியாக தொடர்புகொண்டு விபச்சாரத்துக்கான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளனர்.

Antony Ajay R

ஆன்லைன் மூலம் பாலியல் மோசடியில் சிக்கிய 14,000 பேரை சைபராபாத் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இந்த குற்றத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் கடந்த 3 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 14,000 பேரை விபச்சாரம் உள்ளிட்ட பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர்கள் பெரும்பாலும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி, மும்பை மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ், நேபாளம், தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்களும் குற்றங்களில் ஈடுபட வற்புறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இதற்கான வாடிக்கையாளர்களை ஈர்க்க போதைப் பொருட்களையும் பயன்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இணையத்தளங்களில் விளம்பரம் செய்வது, கால் சென்டர்கள் மூலம் அணுகுவது மற்றும் வாட்ஸ் அப் குரூப்கள் வழியாக தொடர்புகொண்டு விபச்சாரத்துக்கான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர்களிலும் சிலர் இதே வழியில் இந்த வலைக்குள் சிக்கியிருக்கின்றனர்.

இதுகுறித்து சைபராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரா கூறியதாவது:

"பெண்களுக்கு ஆடம்பரமான வாழ்க்கை அமைத்துத் தருவதாகக் கூறி இந்த வலைக்குள் இழுக்கின்றனர். சில நேரங்களில் MDMA மருந்துகள் கொடுத்து குற்றவாளிகளுக்கு இணங்க செய்கின்றனர். பெரும்பாலும் மோசமான பொருளாதார சூழலில் இருக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளையே இவர்கள் குறிவைக்கின்றனர்."

வாடிக்கையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இடைத் தரகர்களாக குற்றவாளிகள் செயல்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் ஆடம்பரமான, மகிழ்ச்சியான வாழ்க்கை முறை கிடைக்கும் என எண்ணியிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

நவம்பர் 15ம் தேதி தொடங்கி இன்று வரை மொத்தம் 18 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குற்றவாளிகள் டெல்லி, பெங்களூரு மற்றும் ஹைத்ராபாத்தில் கால் சென்டர்கள் வைத்திருந்திருக்கின்றனர்.

ஹைத்ராபாத் மற்றும் சைபராபாத் பகுதிகளில் நடைபெற்ற 70% பாலியல் குற்றங்களில் இவர்கள் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?