பெண்களுக்கு எதிரான குற்றங்கள் டெல்லி முதலிடம்  canva
இந்தியா

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரம்: டெல்லி முதலிடம்- 40% அதிகரித்த குற்றங்கள்!

Keerthanaa R

இந்தியாவில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கை கூறியுள்ளது.

என்சிஆர்பி -ன் அறிக்கைப்படி பெருநகரங்களிலேயே மிகவும் பாதுகாப்பற்ற நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் மும்பையும், மூன்றாவது இடத்தில் பெங்களூருவும் இருக்கின்றன.

என்சிஆர்பி அறிக்கைப் படி, டெல்லியில், கடந்த வருடத்தில் தினசரி இரு சிறுமிகள் வீதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். கடந்த வருடம் மட்டும் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 13,982 வழக்குகள் பதிவாகியுள்ளது. இது அதற்கு முந்தய ஆண்டை விட 40% அதிகரிப்பு என அறிக்கை கூறுகின்றது.

மேலும், இந்தியாவிலுள்ள மொத்த 19 பெருநகரங்களிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும், பதிவாகும் குற்றச் சம்பவங்களில் டெல்லியின் பங்கு மட்டும் 32 சதவிகிதம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில், 3948 கடத்தல்கள் , 2022 வழக்குகள் பெண்களுக்கு எதிரான தாக்குதல், 4674 வழக்குகள் கணவர்களால் கொடுமை அனுபவித்தல் , போக்சோ வழக்குகள் 1357 மற்றும் 833 வழக்குகள் பெண் குழந்தைகள் வன்கொடுமை ஆகியவை பதிவாகியுள்ளன.

டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பையில் 5,543 குற்றங்கள், பெங்களூருவில் 3,127 வழக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்த மூன்று இடங்களில் முறையே ஹைதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் லக்னவ் ஆகிய பெருநகரங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?