இளையராஜா மற்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனைப் பகிர்ந்து வரும் பலர் இருவரின் எளிமையையும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக சுந்தர் பிச்சை தரையில் அமர்ந்து இருப்பதனை பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
கமன்ட்களில் இளையராஜாவை அரசியல் ரீதியில் விமர்சிப்பதற்கும் பஞ்சமில்லை. பாஜக கட்சியில் பொறுப்பில் இருக்கும் சிலரும் கூட இந்த புகைப்படத்தை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பது உண்மையாகவே சுந்தர்பிச்சை தானா?
இந்த புகைப்படம் இளையராஜாவுக்கு லண்டனில் நடத்தப்பட்ட ஃபேன்ஸ் மீட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நிகழ்வு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக நடத்தப்பட்டிருக்கிறது. “Fans Meet and Greet Maestro Ilayaraja on his Birthday” என்கிற தலைப்பில் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியை, ‘nba 24 x 7’ யூடியூப் பக்கம் வெளியிட்டிருந்தது.
தற்போது வைரலாகி வரும் இந்த புகைப்படத்தின் பேக் டிராப் மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள ஃபேன்ஸ் மீட் வீடியோவின் திரையை பார்க்கும்போது இரண்டும் ஒரே நிகழ்வு தான் என்று தெரிகிறது.
முக்கிய பிரபலங்களான இளையராஜா மற்றும் சுந்தர் பிச்சை சந்தித்திருந்தால், செய்திகள் வெளியாகியிருக்கும். ஆனால், எந்த விதமான செய்தியோ, புகைப்படமோ வெளியாகவில்லை.
இந்த புகைப்படத்தில் இருப்பது சுந்தர் பிச்சை இல்லை என்பதும் அறிய முடிகிறது. சிலர் இந்த புகைப்படத்தை பகடியாகவும் பயன்படுத்துகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust