udhayagiri caves twitter
இந்தியா

மத்திய பிரதேசத்தில் இருக்கும் குப்தர் கால நூற்றாண்டு குகைகள் - இவற்றின் சிறப்புகள் என்ன?

இந்தியாவில் குகைகளை பற்றி பேசினால் அஜந்தா - எல்லோரா குகைகளை தான் பெரும்பாலும் நாம் குறிப்பிடுவோம். இதனாலேயே இந்த உதயகிரி குகைகள் கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டன

Keerthanaa R

நீங்கள் வரலாற்று பிரியராக இருந்தால் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்த உதயகிரி குகைகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.

மத்திய பிரதேசத்தின் கண்கவர் நிலபரப்புகளுக்கு இடையில் அமைந்திருக்கும் இந்த குகைகள் பண்டைய வரலாற்றின் பொக்கிஷம் என்றே கூறலாம்.

இந்தியாவில் குகைகளை பற்றி பேசினால் அஜந்தா - எல்லோரா குகைகளை தான் பெரும்பாலும் நாம் குறிப்பிடுவோம். இதனாலேயே இந்த உதயகிரி குகைகள் கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டன

இந்த உதயகிரி குகைகளை, சன் ரைஸ் குகைகள் என்றும் அழைக்கின்றனர். இது மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலுக்கு அருகில் அமைந்திருக்கிறது.

வெட்டப்பட்ட பாறைகளால் உருவான இந்த குகைகள், குப்தர் காலத்தில் இருந்து இருப்பதை குறிக்கின்றன. குப்தர்கள் காலத்தின் பிரம்மிக்கவைக்கும் கட்டிக்கலை மற்றும் கலை சாதனைகளை பிரதிபலிக்கிறது இந்த குகைகள்.

மணற்கற்களை குடைந்து செய்யப்பட்ட மொத்தம் 20 குகைகள் இங்குள்ளன. பெரும்பாலும் இங்கு இந்து மதக் கடவுளர்களின் குகைகள் தான் இருக்கின்றன.

இங்கு குகை எண் 5 ராணி கம்பா அல்லது, ராணியின் குகை என்று அழைக்கப்படுகிறது. மற்ற குகைகளை காட்டிலும் இந்த குகை சற்றே வித்தியாசமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். இங்குள்ள சமய மற்றும் புராண உருவங்களின் நுணுக்கமான சிற்பங்களில் சிவன் மற்றும் பார்வதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

குகை நான்கினை படா கம்பா அல்லது பெரிய குகை என்று அழைக்கின்றனர். இந்த குகைகளிலும் நுணுக்கமான வேலைபாடுகளை நாம் காணலாம். இந்த குகை இந்துக் கடவுள் மகா விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இங்கு விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வராக (காட்டுப்பன்றி) ரூபத்தில் ஒரு மிகப் பெரிய சிலையும் இருக்கிறது.

இந்த குகைகள் மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது. சமண மற்றும் மௌத்த மதத்தின் வெளிப்பாடுகளும் இந்த குகைகளில் உள்ளன.

ஜைன குகைகள், குறிப்பாக குகை 19, நேர்த்தியான ஜெயின் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஜெயின் மற்றும் இந்து மதத்திற்கு அர்பணிக்கப்பட்ட அளவு குகைகள் பௌத்த மதத்திற்கு இல்லை என்றாலும், குறிப்பிடத்தக்க குகைகள் இருக்கின்றன.

நீங்கள் உதயகிரி குகைகளை பார்வையிட செல்வதாக இருந்தால், இந்த தகவல்கள் முக்கியம்:

  • உதயகிரி குகைகள் போபாலில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது, இது இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியான ஒரு நாள் பயணமாக அமைகிறது.

  • சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை பார்வையாளர்களுக்காக குகைகள் திறந்திருக்கும்.

  • பார்வையாளர்களிடம் கணிசமான நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும்.

  • இங்குள்ள உள்ளூர் வழிகாட்டிகள், குகைகளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றிய உங்களுக்கு கூறுவார்கள்

  • அக்டோபர் முதல் மார்ச் வரை குளிரான மாதங்களில் குகைகளுக்குச் செல்வது சிறந்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?