நீங்கள் ஒரு பயணத்தைத் திட்டமிடும்போது, விமானங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற செலவுகளுக்கு முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இருப்பினும், குடும்ப உறுப்பினரின் உடல்நல குறைவு, அல்லது எதிர்பாராத சூழ்நிலைகளால் பயணத்தை ரத்து செய்ய வேண்டியதாக இருக்கும்.
தவிர்க்க முடியாத காரணத்திற்காக உங்கள் பயணத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தால், பயணக் காப்பீடு உங்கள் ப்ரீபெய்ட் செலவுகளின் பணத்தை மீட்டெடுக்க உதவும்.
பயணிகளுக்கு காப்பீடு தேவைப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று மருத்துவ அவசரநிலை ஆகும்.
நீங்கள் வெளிநாட்டிற்கு பயணம் செய்யும் போது, சில சமயங்களில் நோய்வாய்ப்படலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்களுக்கு உடனடி மருத்துவ கவனிப்பு அல்லது மருத்துவமனையில் அனுமதிப்பது கூட தேவைப்படலாம்.
பல நாடுகளில் மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்கலாம், பயணக் காப்பீடு இல்லாமல், இந்தச் செலவுகளை உங்கள் பாக்கெட்டில் இருந்து செலுத்த வேண்டியிருக்கும். பயணக் காப்பீடு மருத்துவ சிகிச்சை செலவை ஈடுசெய்யும்.
கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அஜய் ஷா கூறுகையில்,
“தொந்தரவு இல்லாத பயண அனுபவம் தான் ஒவ்வொரு பயணிகளின் ஆசையாக இருக்கும்.
கோவிட்க்குப் பிறகு, மில்லியன் கணக்கான பயணிகள் வணிகம், குடும்ப விடுமுறைகள் அல்லது பிற பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக உலகம் முழுவதும் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
ஒவ்வொருவரும் தங்கள் பயணத்தை பலனளிக்கக்கூடியதாகவும் மறக்கமுடியாததாகவும் மாற்றுவதற்கு முன் திட்டமிடலும் அதே வேளையில், பயணத்தின் போது ஒருவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் முக்கியமானது. எனவே பயணிகளுக்கு காப்பீடு அவசியமாகிறது “ எனக் கூறியிருக்கிறார்.
சமீபத்திய ஆய்வுகளின்படி, இந்தியாவின் பயணக் காப்பீட்டு சந்தை 2022 இல் $ 892.29 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, பயணக் காப்பீடு ஒரு பார்மாலிட்டியாக மட்டுமே வாங்கப்பட்டது. ஆனால் கோவிட்-க்குப் பிறகு இது ஒரு முக்கியமான சேர்க்கையாக மாறியுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust