ராகுல் காந்தி Twitter
இந்தியா

Morning News Today: ராணுவத்திற்கு அரசு மரியாதை காட்டவில்லை - ராகுல் கருத்து

முப்படைகளில் 4 ஆண்டுகள் மட்டுமே வேலைவாய்ப்பை உருவாக்கும் ‘அக்னிபாத்’ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இளைஞர்களின் பொறுமையை அக்னி பரீட்சை செய்யாதீர்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

NewsSense Editorial Team

அக்னிபத் திட்டம் குறித்தும், இளைஞர்களின் போராட்டம் குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் கருத்து தெரிவித்திருக்கிறார். ‛பதவி இல்லை, ஓய்வூதியம் இல்லை, 2 ஆண்டுகளாக நேரடி ஆட்சேர்ப்பு இல்லை.

4 ஆண்டுகளுக்குப் பிறகு நிலையான எதிர்காலம் இல்லை, ராணுவத்திற்கு அரசு மரியாதை காட்டவில்லை.

நாட்டின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் குரலைக் கேளுங்கள், அவர்களை அக்னிபத்தில் நடக்க வைப்பதன் மூலம், அவர்களின் பொறுமையை அக்னி பரீட்சை செய்யாதீர்கள், பிரதமரே' எனத் தெரிவித்துள்ளார்.

PM Modi

குஜராத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள்கள் பயணமாக இன்று குஜராத்தின் வடோதரா செல்கிறார். அங்கு ரூ.21,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து அவர் உரையாற்றுகிறார்.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற 1.4 லட்சத்திற்கும் மேலான வீடுகளைத் திறந்து வைக்கிறார். பிரதமர் மோடியின் தாயார் நாளை தனது நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நாளை பிரதமர் மோடி நாளை தன் தாயைச் சந்தித்து வாழ்த்து பெற உள்ளார்.

அக்னிபத் திட்டத்துக்கு வயது வரம்பு 23-ஆக உயர்வு

ராணுவம், விமானப்படை, கடற்படை இவற்றில் 4 ஆண்டுகளுக்குப் பணியாற்ற இளைஞர்களைத் தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. வடமாநிலங்களில் இந்த அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் ராணுவ வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் நேற்று 2-வது நாளாக தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். பல இடங்களில் ரயில்களை மறித்திருக்கின்றனர், 2 ரயில்கள் தீ வைக்கப்பட்டன.

கல்வீச்சில் பெண் எம்.எல்.ஏ. காயமடைந்தார். இந்நிலையில், இத்திட்டத்துக்கான வயது வரம்பினை 23 ஆக மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. போராட்டம் வெடித்திருக்கிற நிலையில் 17.5 முதல் 21 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாகச் சொல்கின்றனர்.

Radha Iyengar

அமெரிக்க ராணுவத்தின் முக்கியப் பொறுப்புக்கு இந்திய வம்சாவளிப் பெண் நியமனம்

அமெரிக்க ராணுவத்தின் தலைமையகம் பென்டகன். இந்திய வம்சாவளியான டாக்டர் ராதா ஐயங்கார் பிளம்பை, இதன் கையகப்படுத்துதல், நிலைத்தன்மைக்கான துணை கீழ்நிலைச்செயலாளர் என்ற உயர் பதவிக்கு ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார்.

அமெரிக்காவில் நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் மற்றும் எம்.எஸ். பட்டங்களை இவர் பெற்றுள்ளார். கூகுளில் நம்பிக்கை, பாதுகாப்புக்கான ஆராய்ச்சி, நுண்ணறிவு இயக்குநர் பதவி வகித்து வந்தார்.

வாஷிங்டன் வெள்ளை மாளிகை தேசியப் பாதுகாப்பு கவுன்சிலில் மூத்த அதிகாரி, 'பேஸ்புக்' நிறுவனத்தில் கொள்கை பகுப்பாய்வு பிரிவின் உலகளாவிய தலைவர், ராண்ட் கார்ப்பரேஷனில் மூத்த பொருளாதார நிபுணர், எனப் பல பதவிகளை வகித்திருக்கிறார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா

முக்கிய ஆட்டத்தில் இந்தியா தென்னாப்பிரிக்கா இன்று மோதல்

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் தென்னாப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?