Meesho Canva
இந்தியா

Meesho: ஊழியர்களுக்கு 11 நாள் லீவ் கொடுத்த நிறுவனம் - இது தான் காரணமா?

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான மீஷோ தன் நிறுவன ஊழியர்களுக்கு புதிய வகை விடுமுறையை அறிவித்திருக்கிறது.

Keerthanaa R

ஊழியர்களின் மென்டல் ஹெல்த்தை காக்கும் பொருட்டு 11 நாள் விடுப்பு அளிக்கும் திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது மீஷோ நிறுவனம். 

மன அழுத்தம், சோர்வு, டிப்ரெஷன் என்ற வார்த்தைகள் தற்காலத்தில் சர்வ சாதாரணமாக புழங்க ஆரம்பித்துவிட்டன. மன ரீதியான பிரச்னைகள் அதிகமாகி  வருகிறது. முன்புபோல இதனை மூடிமறைக்காமல், வெளிப்படையாக பேசி அதற்கு முறையாக சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

பல முன்னணி நிறுவனங்களும் ஊழியர்களின் மன ரீதியான பிர்சனைகளை கையாள சில யுக்திகளை பயன்படுத்துகிறது.  

அந்த வகையில், பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான மீஷோ தன் நிறுவன ஊழியர்களுக்கு புதிய வகை விடுமுறையை அறிவித்திருக்கிறது. Reset and Recharge  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் 11 நாட்கள் விடுப்பு அளிக்கப்படம். 

மன அழுத்தம் மனது அமைதியின்மை ஆகிய பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுவருபவர்களுக்கு இந்த பிரேக் உதவும் என்கிறது நிறுவனம். இந்த விடுமுறை நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்குமே அளிக்கப்படுகிறது. 

'ஊழியர்களின் நலனை' கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது இந்த ரீசெட் அண்ட் ரீசார்ஜ் திட்டம். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த வருடமும் இது கடைப்பிடிக்கப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 1 வரை விடுமுறை கிடைக்கும்.

"இன்றைய தேதியில் தொழிலாளர்களுக்கு மனவுளைச்சல் மற்றும் பதட்டம் முக்கிய கவலைகளாக இருக்கிறது. இந்த யுக்தியை நாங்கள் பின்பற்றுவது, மற்ற நிறுவனங்களும் ஊழியர்கள் நலனை கருத்தில்கொள்ள உதவும்" என தெரிவித்திருந்தது மீஷோ. மேலும் இந்த 11 நாள் விடுமுறை குறித்து மீஷோ நிறுவனர் சஞ்சீவ் பார்ன்வால் தன் டிவிட்டர் பக்கத்திலும் தெரிவித்திருந்தார்.

2015 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மீஷோ பல முன்னோக்கிய திட்டங்களை இதற்கு முன்பும் அறிமுகப்படுத்தியுள்ளது. Boundaryless Workplace Model, Infinite Wellness Leave மற்றும் Gender Neutral Parental Leave ஆகிய திட்டங்கள் அடங்கும் 

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?