Jibhi: இமாச்சலில் இருக்கும் இந்த Off Beat மலை கிராமத்தின் சிறப்பு என்ன? twitter
இந்தியா

Jibhi: இமாச்சலில் இருக்கும் இந்த Off Beat மலை கிராமத்தின் சிறப்பு என்ன?

இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் பஞ்சார் பள்ளத்தாக்கின் ஒரு பகுதி தான் இந்த ஜிபி கிராமம். அடர்ந்த, உயரமான மரங்கள் இருக்கும் காடுகளும், பனி சூழப்பட்ட மலைகளும் இருக்கும் இடமிது.

Keerthanaa R

கோடைக்காலத்தில் சுற்றுலா செல்ல இந்தியாவில் இமாச்சல பிரதேசம் ஒரு சிறந்த இடமாகும்.

இமாச்சலம் என்றதும் நம் நினைவுக்கு வருவது மணாலி தான். அதுப்போக, ஹிடிம்பா பள்ளத்தாக்கு, ஸ்பிட்டி பள்ளத்தாக்கு ஆகியவற்றைக் கூறலாம்.

ஆனால், இங்கு ஜிபி என்று ஒரு இடம் இருக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்தை பற்றி இன்னும் விரிவாக தெரிந்துகொள்ளலாம்

இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் பஞ்சார் பள்ளத்தாக்கின் ஒரு பகுதி தான் இந்த ஜிபி கிராமம். அடர்ந்த, உயரமான மரங்கள் இருக்கும் காடுகளும், பனி சூழப்பட்ட மலைகளும் இருக்கும் இடமிது.

இங்கு இருக்கும் தீர்த்தன் நதி, கிராமத்திற்கு மேலும் அழகை கூட்டுகிறது. இந்த மலை கிராமத்தில் நீர்வீழ்ச்சிகளும் அடங்கியிருக்கின்றன.

அதில் ஜிபி நீர்வீழ்ச்சி நிச்சயம் பார்க்கவேண்டிய ஒன்றாகும். இங்கு மர பலகைகளாலான பாலம் ஒன்று இருக்கிறது. அங்கிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜலோரி பாஸ் என்ற இடத்திற்கும் நாம் செல்லலாம்.

இந்த கிராமத்தின் பெரும்பகுதி கட்டிடங்கள், வீடுகள் மரம் மற்றும் கற்களால் ஆனது. ஒவ்வொரு வீட்டின் பின்புறத்திலும் ஆப்பிள் தோட்டம் இருக்கும்.

அதிகமாக மக்கள் இந்த கிராமத்தை பற்றி அறியாததால், அங்குள்ளவர்கள் நடத்தும் சிறிய, வசதியான ஹோம்ஸ்டேக்கள் தான் நாம் அங்கு தங்க கிடைக்கும் இடங்களாகும்.

90களின் மத்தியில், ஒரு முன்னாள் ராணுவ வீரர் இந்த கிராமத்தில் விருந்தினர் மாளிகை ஒன்றை கட்டினார். அங்கு உணவுகள் வழங்குவதும், விருந்தினர்களுக்கு ஊரைச் சுற்றி காட்டுவதையும் அவரது வேலையாக வைத்திருந்தார். அப்படி தான் இந்த கிராமம் மக்கள் மத்தியில் தெரிய ஆரம்பித்தது என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த இடத்தின் மற்றுமொரு சிறப்பு சென்னி கோட்டை. இங்குள்ள தி கிரேட் டவர் கோவில், தகவல்களின் அடிப்படையில் முழு மேற்கத்திய நாடுகளிலேயே மிக உயரமான கட்டிடமாகும், இது பாரம்பரிய கதிகுனி கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது.

எந்த ஒரு புதிய இடத்திற்கு செல்லும்போதும், அந்த இடத்தின் பிரபலமான, பிரதானமான உணவை உட்கொள்வது அவசியம். இது நம்மை அவர்களின் கலாச்சாரத்துக்குள், நம்மையும் ஒன்றிணைக்கச் செய்கிறது.

ஆகையால், ஜிபியில் கிடைக்கும் பாரம்பரிய இமாச்சல பிரதேச உணவை நிச்சயம் சுவைத்து பாருங்கள்.

மார்ச் முதல் மே மாதம் வரையான காலக்கட்டத்தில் இந்த ஜிபி கிராமத்திற்கு சென்று வருவது சிறந்த அனுபவத்தை கொடுக்கும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?