இந்தியாவில் கோவில்களுக்கு பஞ்சமே இல்லை. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற சொல்லுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பகுதியிலும் கோவில்கள் உள்ளன.
இந்த பதிவில் மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஓம்காரேஸ்வர் கோவில் பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஓம்காரேஸ்வர் கோவில்.
இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்த கோவிலில் இருக்கும் லிங்கம் ’சுயம்பு லிங்கம்’ என கூறப்படுகிறது.
சிறப்பு என்னவென்றால், இந்த கோவில் இரண்டு சன்னதிகளைக் கொண்டுள்ளது. ஒன்று ஓம்கேஸ்வர் என்றும் மற்றொன்று அமரேஷ்வர் என்றும் கூறப்படுகிறது.
மேலும் சிவபெருமானின் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாக உள்ள ஓம்காரேஸ்வர் கோயில் 'ஓம்’ என்ற வார்த்தை வடிவில் அதன் தோற்றம் உள்ளது.
கோயிலின் முன்பு நந்தி மண்டபத்தில் பெரிய நந்தி அமைந்துள்ளது.
கோயிலானது மூன்று அடுக்குகளாக அமைந்துள்ளது. முதல் தளத்தின் கருவறையில் ஓங்காரேசுவரர் சிறிய லிங்கவடிவில் உள்ளார். இரண்டாவது தளத்தில் மாகாளர் லிங்கவடிவில் உள்ளார். மூன்றாவது தளத்தில் சித்தீசுவர லிங்கம் உள்ளது.
இந்தியாவின் மிகவும் புனிதமான தலங்களில் ஒன்றாக உள்ள இந்த கோயிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். காவேரி மற்றும் நர்மதை நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு.
மத்திய பிரதேசம் சென்றால் நிச்சயம் இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust