ஸ்டாலின் - கனிமொழி டு ராகுல் - பிரியங்கா; இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத உடன்பிறப்புகள் Twitter
இந்தியா

ஸ்டாலின் - கனிமொழி டு ராகுல் - பிரியங்கா; இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத உடன்பிறப்புகள்

Priyadharshini R

இந்திய அரசியலை பொறுத்தவரை பல்வேறு அரசியல்வாதிகள் உள்ளனர். சிலர் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தி அரசியல் செய்கின்றனர். சிலரோ சகோதரர்களாகவே இருந்து அரசியல் செய்கின்றனர். அவர்கள் ஒரே கட்சியில் இருந்தாலும் சரி வெவ்வேறு கட்சியில் இருந்தாலும் சரி!

உதாரணமாக தமிழ்நாடு என்று எடுத்துக்கொண்டால் ஸ்டாலின் - கனிமொழி இந்தியா அளவில் எடுத்துக் கொண்டால் ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி.

அப்படி இந்திய அரசியலில் சகோதரர்களாக இருந்து ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள் குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.

ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி

ராஜீவ் காந்தி - சோனியா காந்தி தம்பதிக்கு பிறந்தவர்கள் தான் ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி.

உத்தரபிரதேசத்தில் கட்சியின் அமைப்பை கட்டமைக்கும் பொறுப்பில் பிரியங்கா காந்தி உள்ளார். ராகுல் காந்தி வயநாடு முன்னாள் எம்.பி.யாக இருந்தார். சமீபத்தில் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எம்.பி பதவி பறிப்போனது.

அரசியல் நிகழ்வுகளில் ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி ஒன்றாக கலந்துகொள்வார்கள்.

அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

பிரியங்கா தனது சகோதரர் தனக்கு அன்பு, நேர்மை மற்றும் பொறுமையை கற்றுக் கொடுத்ததாக கூறியிருகிறார். சமீபத்தில் கூட ராகுலின் ட்வீட்டர் இடைநீக்கம் செய்யப்பட்டபோது அவர் தனது சகோதரருக்கு உதவி செய்தார்.

ஸ்டாலின் - கனிமொழி

மறைந்த மு.கருணாநிதியின் பிள்ளைகளான கனிமொழியும் மு.க.ஸ்டாலினும் ஒரே கட்சியில் பணியாற்றி வருகின்றனர்.

திமுக தலைவராக இருக்கும் ஸ்டாலின், தமிழகத்தின் முதல் முறையாக நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயரும் ஆவார். 2009ல், மாநிலத்தின் துணை முதல்வராகவும் பணியாற்றினார். தற்போது தமிழக முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்.

மக்களவையின் உறுப்பினராக கனிமொழி உள்ளார். அதற்கு முன்புவரை அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

மிசா பார்தி மற்றும் தேஜஸ்வி யாதவ்

குடும்பத்தின் அரசியல் காட்சியில் இணைந்த மற்றொரு உடன்பிறப்புகள் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் மற்றும் மிசா பார்தி. இவர்கள் பீகாரின் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவின் பிள்ளைகள். அவர்கள் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) இல் இணைந்தனர்.

மூத்த சகோதரரான தேஜ் பிரதாப் யாதவ் 2015 இல் அரசியல் காட்சியின் ஒரு பகுதியாக மாறினார். 2015ல் பீகாரின் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இரண்டாவது மூத்த சகோதரர் தேஜஸ்வியும் அதே ஆண்டில் பீகார் சட்டமன்றத்தில் சேர்ந்தார்.

அவர் 2015-2017 வரை குறுகிய காலத்திற்கு மாநிலத்தின் துணை முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மூன்றாவது உடன்பிறப்பு மிசா பார்தி 2014 இல், அவர் பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதியில் தோல்வியுற்றார். ஜூன் 2016 இல், அவர் ராஜ்யசபா தேர்தலுக்கான கட்சியின் வேட்பாளராக இருந்தார்.

ஜவஹர்லால் நேரு - விஜய் லக்ஷ்மி பண்டிட்

ஜவஹர்லால் நேரு மற்றும் அவரது சகோதரி விஜய் லக்ஷ்மி பண்டிட் அவர்களின் தலைமைத்துவ திறமைக்காக பிரபலமான மற்றொரு சகோதர-சகோதரி.

சுதந்திரம் பெற போராடிய இருவரும், ஜனநாயக இந்தியாவின் தலைசிறந்த தலைவர்கள் என்று போற்றப்படுபவர்கள்.

இருவரும் தீவிர அரசியலில் இறங்கினர். நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​​​பண்டிட் அமைச்சரவை பதவியை வகித்த முதல் பெண்மணி ஆனார்.

ஜெகன் மோகன்- ஷர்மிளா

ஆந்திரப் பிரதேச மாநில முதல்வராக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி யுவஜன ஸ்ராமிக விவசாயி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் பிள்ளைகளான ஷர்மிளாவும் - ஜெகன் மோகனும் ஒரே கட்சியில் பணியாற்றி வருகின்றனர்.

ஆனால் இவர்களும் இடையே நடந்த கருத்து வேறுபாடு காரணமாக ஷர்மிளா தெலுங்கானாவில் YSR Telangana Party என்ற கட்சியைத் தொடங்கியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?