கிட்டத்தட்ட 48,000 கிலோமீட்டர் பெருங்கடல்களில் பயணிக்க வேண்டும்.
இதற்கு 300 நாட்களுக்கும் மேல் ஆகலாம். கடல் பழக்கமானவர்களுக்கு இன்றையத் தொழில்நுட்ப உதவியுடன் இது ஒரு பெரிய காரியமே இல்லை.
ஆனால் கோல்டன் குளோப் போட்டி விதிகளின் படி 1968க்கு பின் வந்த எந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தாமல் பயணிக்க வேண்டும். ஜி.பி.எஸ் கூட கிடையாது.
தனியாக இந்த பயணத்தை மேற்கொள்ள துணிவு, படகோட்டிக்கே உரிய வீரம் மற்றும் அதிக பணமும் தேவை. ( படகோட்டுதல் என்பது பணக்காரர்களின் விளையாட்டு. )
இந்த போட்டியில் பங்கேற்கிறார் மும்பையின் குப்பங்களில் பிறந்து வளர்ந்தவரான கௌரவ் ஷிண்டே.
இப்போது இவர் கனட குடிமகனாக இருந்தாலும் தனது தலித் சமுகத்தை உலகுக்கு முன்னிருத்தவே மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்து இந்த போட்டியில் பங்கேற்பதாக கூறியுள்ளார்.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக தனது வீடு உள்ளிட்ட அத்தனை சொத்துகளையும் விற்றுவிட்டார் கௌரவ். படகோட்டுதல் கிரிக்கெட் போன்று பிரபலமான போட்டி இல்லை என்பதனால் இதற்கு ஸ்பான்சர்களைப் பெற மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
எளிமையாக தனது ட்விட்டரில் அமிதாப் பச்சன் நடித்த ஜுண்ட் தான் தன் வாழ்க்கை என ட்வீட் செய்துள்ளார் அவர்.
மும்பையில் 11 வயதில் முதன்முறையாக படகோட்டத் தொடங்கியிருக்கிறார். பலரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு படகோட்டுதலைக் கற்க முயற்சித்துள்ளார்.
ஆண்டுக்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்தி முறையாக கடலில் படகோட்ட பயிற்சி பெற்றுள்ளார்.
இந்தியாவில் நடந்த பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அவர் தலித் சமூகத்தில் பிறந்தவர் என்பதனால் அந்த வெற்றியைக் கூட கொண்டாட அனுமதிக்கப்படமாட்டார்.
"நான் பெற்ற விருதுகளை வழங்கும் விழாவுக்கு கூட எனக்கு அழைப்பு விடுக்காத நாட்கள் இருந்தது. என் விருதுகளை இரயில்வே ஸ்டேஷனில் கொடுத்துவிடுவார்கள். நான் பியூனிடம் பெற்றுக்கொள்வேன்" என தனது கடந்த காலத்தைக் குறித்து ஊடகங்களிடம் கூறியுள்ளார் கௌரவ்.
இந்தியாவில் நடந்த பல படகோட்டும் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார் கௌரவ்.
2013ம் ஆண்டு இந்திய படகோட்டிகள் சங்கத்தால், கரையோர படகோட்டுதலில் அட்மிரல் ராமதாஸ் விருது பெற்றார் ஷிண்டே. இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் இவரே.
கனடாவின் ஐவி தொழில்பள்ளியில் எம்.பி.ஏ படித்தார் கௌரவ். இப்போது பல நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் மோடிவேஷனல் ஸ்பீச்களைக் கொடுத்து வருகிறார்.
கோல்டன் குளோப் போட்டியில் பங்கேற்றுள்ள கௌரவ், அதனை வெல்வதன் வழியாக உலகுக்கு பெருமையுடன் அறிமுகமாவார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust